அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்த ஆஸ்திரியா, டென்மார்க்

UEFA EURO 2020

131

யூரோ 2020 கால்பந்து தொடரில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகளின்படி ஆஸ்திரியா, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் டென்மார்க் அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.

நேற்று இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகள் கீழே

உக்ரேன் எதிர் ஆஸ்திரியா 

குழு C யில் ஏற்கனவே தலா ஒரு தோல்வி, ஒரு வெற்றியைப் பெற்றிருந்த இவ்விரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த மோதலில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என்ற நிலையில் ரோமானியாவின் தேசிய அரங்கில் போட்டி ஆரம்பமானது. 

இத்தாலி புதிய சாதனை; கோல் வித்தியாசத்தில் அடுத்த சுற்றுக்கு சென்ற வேல்ஸ்

போட்டியில் இரண்டு அணிகளும் சம அளவிலான ஆதிக்கத்துடன் ஆடினாலும், ஆஸ்திரிய அணி கோலுக்கான அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தியது. இதன் பயனாக 21ஆவது நிமிடத்தில் அலாபாவின் உதவியினால் Christoph Baumgartner ஆஸ்திரிய அணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக்கொடுத்தார்

இதன்மூலம், குழு C யில் இருந்து இரண்டாவது அணியான ஆஸ்திரியா அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது. 

முழு நேரம்: உக்ரேன் 0 – 1 ஆஸ்திரியா

கோல் பெற்றவர்கள் 

  • ஆஸ்திரியா – Christoph Baumgartner 21

வட மசிடோனியா  எதிர் நெதர்லாந்து 

குழு C இற்கான அடுத்த மோதலில் விளையாடிய நெதர்லாந்து அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியிருந்த நிலையில், முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த வட மெசிடோனிய அணியுடன் மோதியது. 

நெதர்லாந்தின் Amsterdam அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 24ஆவது நிமிடத்தில் Memphis Depay நெதர்லாந்து அணிக்கான முதல் கோலைப் பெற்றார். 

பின்னர், இரண்டாம் பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்களின் பின்னர் 7 நிமிட இடைவெளியில் நெதர்லாந்து அணியின் தலைவர் Georginio Wijnaldum அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்று அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெறச் செய்தார். 

முழு நேரம்: வட மசிடோனியா  0 – 3 நெதர்லாந்து

கோல் பெற்றவர்கள்   

  • நெதர்லாந்து – Memphis Depay 24’, Georginio Wijnaldum 29’ & 68’

ரஷ்யா எதிர் டென்மார்க் 

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இந்த போட்டி டென்மார்க்கின் பார்கென் அரங்கில் இடம்பெற்றது. டென்மார்க் எந்தவொரு வெற்றியையும் பெறாத நிலையில், ரஷ்யா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையிலும் இந்த மோதலில் களமிறங்கியது. 

டென்மார்க் வீரர் Damsgaard 38ஆவது நிமிடத்தில் பெற்ற ஒரே கோலுடன் முதல் பாதி முடிவடைந்தது. இரண்டாம் பாதியின் 59ஆவது நிமிடத்தில் Poulsen டென்மார்க் அணிக்கான அடுத்த கோலையும் பெற்றார். 

எனினும், 70ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியின்போது Dzyuba ரஷ்யாவுக்கான முதல் கோலை பெற்றார்.

பின்னர் 2 நிமிட இடைவேளையில் டென்மார்க் இரண்டு கோல்களை பெற, போட்டி முடிவில் மேலதிக 3 கோல்களால் வெற்றி பெற்ற டென்மார்க் இந்தக் குழுவில் இருந்து இரண்டாவது அணியாக அடுத்த சுற்றுக்கு சென்றது

முழு நேரம்: ரஷ்யா 1 – 4 டென்மார்க்

கோல் பெற்றவர்கள்   

  • ரஷ்யா  – Artem Dzyuba 70 (P)
  • டென்மார்க் – Mikkel Damsgaard 38, Yussuf Poulsen 59, Andreas Christensen 79, Joakim Mæhle 82 

ரொனால்டோவுக்கு இரட்டை கோல்; ஜெர்மனியை வீழ்த்திய பிரான்ஸ்

பின்லாந்து எதிர் பெல்ஜியம்

ரஷ்யாவின் Krestovsky அரங்கில் இடம்பெற் இந்த மோதலில் எற்கனவே அடுத்த சுற்றுக்கு தெரிவாகிய பெல்ஜியம் அணிக்கு எதிராக கட்டாய வெற்றி ஒன்றுக்காக பின்லாந்து மோதியது

முதல் பாதியில் எந்த கோலும் பெறப்படாத நிலையில் 74ஆவது நிமிடத்தில் ஓன் கோல் முறையில் Lukáš Hrádecký மூலம் பெல்ஜியம் முதல் கோலை பெற்றது.

அந்த கோல் பெறப்பட்டு 7 நிமிடங்களில் லூகாகு உலகின் முதல்நிலை அணியான பெல்ஜியமுக்கு அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

எனவே, போட்டி முடிவில் 2-0 என வெற்றி பெற்ற பெல்ஜியம் தோல்விகள் ஏதுமின்றி அடுத்த சுற்றுக்கு சென்றது

முழு நேரம்: பின்லாந்து 0 – 2 பெல்ஜியம்

கோல் பெற்றவர்கள்   

  • பெல்ஜியம்  – Lukáš Hrádecký 74’(OG), Romelu Lukaku 81’ 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<