இலங்கை கிரிக்கெட் அணிக்கு டில்ஷான் கூறும் அறிவுரை

3729
Dilshan

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமாக செயற்பட, நடைபெறவிருக்கும் போட்டிகளில் இலங்கை அணி செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கின்றார்.  

நாடு திரும்புகிறார் லசித் மாலிங்க

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று (11)…

இலங்கை அணிக்காக மூன்று (2007, 2011, 2015) உலகக் கிண்ணத் தொடர்களில் ஆடியிருக்கும் 42 வயதான டில்ஷான், வேகப் பந்துவீச்சாளரான நுவான் பிரதீப் உபாதைக்கு ஆளாகியிருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடனான தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் அதிரடி சகலதுறை வீரரான மிலிந்த சிறிவர்தனவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கின்றார்.

”பிரதான பந்துவீச்சாளர் ஒருவர் உபாதைக்கு ஆளாகியிருப்பதால், இலங்கை அணி ஒரு சகலதுறை வீரரை இணைப்பது நல்லது என நினைக்கின்றேன். அந்த வகையில் மிலிந்த சிறிவர்தனவுக்கு வாய்ப்பு வழங்கலாம். அது மட்டுமே  (அணியில்) நான் எதிர்பார்க்கும் மாற்றம். இதேநேரம், குசல் மெண்டிஸ் 4ஆம் இலக்கத்தில் துடுப்பாடாமல் 6ஆம் இலக்கத்தில் களம் வர வேண்டும்.”

இலங்கை அணி, இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியினை பதிவு செய்ய நுவான் பிரதீப் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

ரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி

உலகக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி…

அதேநேரம், இலங்கை அணி விளையாடிய உலகக் கிண்ணப் போட்டிகளில் 4ஆம் இலக்கத்தில் களமிறங்கிய குசல் மெண்டிஸ் மிகவும் மோசமான முறையில் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனாலேயே, குசல் மெண்டிஸ் துடுப்பாடும் இடம் மாற்றப்பட வேண்டும் என டில்சான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக தடுமாற்றம் காண்பிக்கும் இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டம் போட்டியின் முழு ஓவர்களையும் விளையாடும் அளவுக்கு முன்னேற வேண்டி இருப்பதனையும் திலகரட்ன டில்ஷான் சுட்டிக்காட்டியிருந்தார்.

”(எதிரணிக்கு) இலக்கு ஒன்றினை வைக்கும் எண்ணத்துடன் இல்லாமல் (இலங்கை அணியின்) துடுப்பாட்டத் தொகுதி 50 ஓவர்களுக்கும் துடுப்பாட வேண்டும். இதுவே, இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறைக்கு பிரதான இலக்காக இருக்க வேண்டும்.”

>>சேஷார்ட்டின் உலகக் கிண்ண கனவை சிதைத்ததா ஆப்கானிஸ்தான்?

இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்படாத காரணத்தினால் இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தை பெற்றும் பின்னர் சரிவினால் எதிர்பார்த்த ஓட்டங்களை பெறாமல் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்டம் ஒரு புறமிருக்க, இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறை குறித்தும் திலகரட்ன டில்ஷான் கருத்துக்களை வெளியிட்டார். அதில், லசித் மாலிங்க இலங்கை அணிக்கு இந்த உலகக் கிண்ணத் தொடரில் முக்கியமான பந்துவீச்சாளராக இருப்பார் எனக் கூறியிருந்தார்.

”நான் (ஆப்கானிஸ்தான் உடனான) கடைசிப் போட்டியில் அவரின் பந்துவீச்சினை பார்த்தேன். அவர் தனது பழைய நிலைக்கு வந்துவிட்டார் என்பது தெரிகின்றது. அவருக்கு எல்லா யோக்கர் பந்துகளையும் சரியான இடத்தில் போட முடியுமாக இருக்கின்றது. அது, இலங்கை அணிக்கு கிடைத்த நல்ல விடயம். அவரிடம் நிறைய அனுபவமும் இருக்கின்றது. அவர் ஏனைய பந்துவீச்சாளர்களுடன் இணைந்து செயற்படும் போது அவரினால் (சாதிக்க) முடியும்.” என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<