பங்களாதேஷ் தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

77

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் மிஸ்பாஹ் உல் ஹக்கினால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ளது.

மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் பாகிஸ்தான் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 3 டி20, 2 டெஸ்ட் மற்றும் 1 போட்டி கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய மூவகையான தொடர்களிலும் விளையாடவுள்ளது.

மெண்டிஸின் அபார சதத்தால் தொடர் வெற்றி இலங்கை வசம்!

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான…

முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் கடந்த திங்கட்கிழமை (27) நிறைவுக்கு வந்தது. குறித்த தொடரின் இறுதிப்போட்டி மழையினால் தடைப்பட பாகிஸ்தான் அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் பின்னர் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள காரணத்தினாலேயே தற்போது முதல் போட்டிக்கான குழாம் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள குழாமின் அடிப்படையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்தும் அஸார் அலி செயற்படவுள்ளார்.

பாகிஸ்தான் அணி இறுதியாக சொந்த மண்ணில் இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரை 1-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது. இதில் குறித்த தொடரில் விளையாடிய குழாமிலிருந்து இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அடிப்படையில் குழாமில் இணைக்கப்பட்ட 33 வயதுடைய சகலதுறை வீரர் காசிப் பாத்தி சர்வதேச அறிமுகம் பெறாமலேயே குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை அணியுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் ஷென்வாரி, விளையாடிய ஒரு போட்டியுடனே குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் பதிலாக அண்மைக்காலத்தில் பாகிஸ்தான் உள்ளூர் தொடரில் பிரகாசித்த இரு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் சுப்பர் ஓவரில் இந்தியா அசத்த நியூசிலாந்துக்கு ஏமாற்றம்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியிலும் இந்திய அணி சுப்பர் ஓவரில் த்ரில்…

கடந்த 2018 ஒக்டோபரில் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது 32ஆவது வயதில் டெஸ்ட் அறிமுகம் பெற்று வெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் பின்னர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் காணப்பட்ட சகலதுறை வீரர் பிலால் ஆஸிப் இறுதியாக 2018 டிசம்பரில் நியூசிலாந்து அணியுடன் விளையாடியதன் பின்னர் மீண்டும் பாகிஸ்தான் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இதுவரையில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிலால் ஆஸிப் துடுப்பாட்டத்தில் 73 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 16 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். இதில் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற தனது கன்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 36 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை கடந்த 2018ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்று வெறும் 4 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் காணப்பட்ட மற்றுமொரு சகலதுறை வீரர் பஹீம் அஷ்ரப் பங்களாதேஷூடனான டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரையில் 4 டெஸ்ட் போட்டிகளில் 138 ஓட்டங்களையும், 11 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

மேலும் பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடும் அடிப்படையில் இலங்கை அணியுடனான தொடருக்கான குழாமில் இடம்பெற்றும் போட்டியில் விளையாடாத பவாட் அலாம் தொடர்ந்தும் பாகிஸ்தான் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

கிரிக்கெட் விளையாட்டுக்கு மீளும் குமார் சங்கக்கார

இலங்கையின் கிரிக்கெட் காதலர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் …

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் உள்ளடக்கப்பட்ட தொடராக நடைபெறவுள்ள குறித்த தொடரின் முதல் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) தொடக்கம் செவ்வாய்க்கிழமை (11) வரை ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஏப்ரல் 5ஆம் திகதி கராச்சியில் நடைபெறவுள்ளது. 

டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் பாகிஸ்தான் அணி 1 வெற்றியுடன் 80 புள்ளிகளை பெற்று நான்காமிடத்திலும், பங்களாதேஷ் அணி புள்ளிகள் ஏதுமின்றி ஒன்பதாவது இடத்தில் காணப்படுகிறது.

 

முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் குழாம்

அஸார் அலி (அணித்தலைவர்), ஆபித் அலி, அஸாட் சபீக், பாபர் அஸாம், பிலால் ஆஸிப், பஹீம் அஷ்ரப், பவாட் அலாம், ஹாரிஸ் சுஹைல், இமாம் உல் ஹக், இம்ரான் கான், மொஹமட் அப்பாஸ், மொஹமட் றிஸ்வான், நஸீம் ஷா, ஷஹீன் அப்ரிடி, ஷான் மஸூத், யாஸிர் ஷாஹ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<