நாடு திரும்புகிறார் லசித் மாலிங்க

14400
Lasith Malinga

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று (11) நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் நாடு திரும்பவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 16வது லீக் போட்டி இன்று பிரிஸ்டோலில் உள்ள கௌண்டி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Photos : CWC19 – Sri Lanka training session ahead of Bangladesh match

ThePapare.com | Isuru Sameera Peiris |09/06/2019 Editing..

இந்தப் போட்டிக்காக இலங்கை அணி தயாராகிவரும் நிலையில், லசித் மாலிங்க இன்றைய போட்டியை முடித்துக்கொண்டு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது குடும்ப சடங்கு ஒன்றுக்காகவே மாலிங்க நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது Thepapare.com இணையத்தளத்திற்கு இலங்கை அணி முகாமையாளர் அசந்த டி மெல் குறிப்பிடுகையில், “முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க இன்றைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளார். 

எனினும், அவரது மனைவியின் தயார் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த சடங்குக்காக மாலிங்க இந்தப் போட்டிக்கு பின்னர் நாடு திரும்பவுள்ளார். இலங்கைக்கு திரும்பும் லசித் மாலிங்க எதிர்வரும் 14ம் திகதி மீண்டும் அணியுடன் இணைவார்” என அவர் குறிப்பிட்டார். 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியை தொடர்ந்து இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியை எதிர்வரும் 15ம் திகதி இலண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கிறது.

இதேவேளை, இதுவரை இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டியில் தோல்வியையும், ஒரு போட்டி சமனிலையிலும் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<