சீரற்ற காலநிலைக்கு இடையே சமநிலையுற்ற பாடசாலை கிரிக்கெட் போட்டிகள்

71

சிங்கர் அனுசரணையில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகள் இன்று (03) நிறைவடைந்தன. இந்த இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றன.

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபிக்காத போதும் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.

இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை அணிக்கு பலம் சேர்த்த சரித் அசலங்க

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட புனித ஜோசப் கல்லூரி 190 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இசிபதன கல்லூரி சார்பாக பந்துவீச்சில் மதுஷிக்க சந்தருவன் 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய இசிபதன கல்லூரியும் 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. புனித ஜோசப் கல்லூரி சார்பாக சாலிந்த செனவிரத்ன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி 118 ஓட்டங்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் முடிவுற்றது. சீரற்ற காலநிலையும் போட்டியில் தாக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 190 (61.3) – ஷெவோன் டானியல் 41, மிரங்க விக்ரமகே 31, சச்சிந்த மஹிந்தசிங்க 27, ரிஷித்த பெரேரா 25, மதுஷிக்க சந்தருவன் 6/49

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 172 (47.3) – தெவிந்து திக்வெல்ல 51, ரவிந்து ரத்னாயக்க 34, சவிந்து உத்சர 31, மதுஷிக்க சந்தருவன் 4, மித்திர தெனுர 2/42, சாலிந்த செனவிரத்ன  4/24, மிஹிரங்க விக்ரமகே 2/34

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 118/9 (52) – ஷெரோன் பொன்சேகா 49, சச்சிந்த மஹிந்தசிங்க 33, தெவிந்து திக்வெல்ல 4/28, மதுஷிக்க சந்தருவன் 2/28, ரவிந்து ரத்னாயய 2/17

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது


புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு

சீரற்ற காலநிலை மற்றும் மந்தமான ஆட்டம் காரணமாக புனித அந்தோனியார் மற்றும் ஆனந்த கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட புனித அந்தோனியார் கல்லூரி மிக மந்தமாக ஆடி 75.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. தீக்ஷன குணசங்க 68 ஓட்டங்களை பெற்றார்.

ஒருநாள் தரவரிசையில் அதியுயர் முன்னேற்றம் கண்ட அகில தனன்ஜய

இந்நிலையில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி கடைசி நாள் ஆட்ட நேர முடிவின்போது 107 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 173/9 d (75.5) – தீக்ஷன குணசிங்க 68, தமஷன அபேகோன் 31, எம். ருக்ஷான் 22, எம். காமில்  23, ஜனிந்து ஜயவர்தன 3/31, சவிரு பண்டார 3/49, சாமிக்க குணசேக்கர 2/28

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 107/6 – கனிஷ்க ரன்திலக்ககே 27, காமேஷ்  நிர்மால் 19, வினுஜ விஜேபண்டா 18*, நவோத்ய விஜயகுமார 3/45

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<