உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்து வீச்சாளர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக விளையாடி அணிக்குத் தேவையான வெற்றியைப் பெற்றுக்கொடுக்க கிடைத்தமை மிகப் பெரிய சாதனை என தான் கருதுவதாக பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான இமாத் வசிம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற பரபரப்பான உலகக் கிண்ண லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் கடைசி நேரத்தில் செய்த சில தவறுகளால் அந்த அணி தோல்வி அடைந்தது.
ஆப்கான் வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட பாகிஸ்தான்
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்……….
இதனால், பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்று 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிலும் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான இமாத் வசிம் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்ட பாகிஸ்தான் அணி தன் அரையிறுதிக் கனவை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்தப் போட்டியில் ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பந்துவீச்சில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்திருந்தனர். அதிலும் குறிப்பாக, ரஷித் கான் ஹரிஸ் சொஹைலை ஆட்டமிழக்கச் செய்ததோடு, சர்பராஸ் ரன் அவுட் ஆனதும் மிகப் பெரிய நெருக்கடியை பாகிஸ்தானுக்கு கொடுத்திருந்தது.
எனினும், அந்த நேரத்தில் ஆடுகளத்தில் இருந்து சிறந்த முறையில் விளையாடிய இமாத் வசிம், பாகிஸ்தான் அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றதுடன், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இருந்து வெளியேறும் நுவன் பிரதீப்
கிரிக்கெட் உலகக் கிண்ணத்……….
இந்த நிலையில், நெருக்கடியான நேரத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த கிடைத்தமை தொடர்பில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இமாத் வசிம்,
“நான் துடுப்பெடுத்தாட சென்றபோது, ரஷித் கான் அற்புதமாக பந்துவீசிக் கொண்டிருந்தார். உண்மையில் அவருடைய பந்தை என்னால் சரியாக தேர்வு செய்ய முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே நின்று ஆடுவதற்கு திட்டம் இட்டேன். இதனால், ஐம்பது ஓவர்களையும் முழுமையாக விளையாட முடிவு செய்தோம்.
நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் அணித் தலைவர் குல்படின் நயி நைப் முக்கியமான ஓவர்களை வீசும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்காக அவர் (நைப்) மட்டுமே வேகப் பந்துவீச்சாளராக இருந்தார், நாங்கள் அவரை மாத்திரம் இலக்கு வைத்தோம். அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், வேகப் பந்துவீச்சாளர் வரும்போது தாக்குவதே எங்கள் திட்டமாக இருந்தது. மறுபுறத்தில் அவர்கள் 250 அல்லது 260 ஓட்டங்களைக் குவித்திருந்தால் நிச்சயம் எந்தவொரு அணிக்கும் அவர்களை வெற்றி கொள்வது கடினமாக இருந்திருக்கும்.
உண்மையில் அதற்கான அனைத்து கௌரவமும் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களையே சாரும். அவர்கள் இந்தியா, இலங்கை போன்ற அணிகளுக்கு நெருக்கடி கொடுத்திருந்தனர். தற்போது எமக்கு பலத்த போட்டியைக் கொடுத்து வெற்றியின் விளிம்பு வரை வந்தனர்” என இமாத் கூறினார்.
பொதுவாக எல்லா வீரர்களும் தமது நாட்டை வெற்றி பெறச் செய்யவே விளையாடுவார்கள். நான் எப்போதும் நாட்டுக்காக 100 சதவீத பங்களிப்பை வழங்குவேன். முடிவு எதுவாக இருந்தாலும் எனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்வேன். எனவே, இது என்னுடைய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று என கருதுகிறேன். அதேபோல, எந்தவொரு அணியையும் தோற்கடிக்கின்ற திறமை எம்மிடம் உண்டு என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இவ்வாறான கடினமான ஆடுகளங்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு இமாத் வசிம் அளித்த பங்களிப்பு முக்கியமானது என்று பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட் தெரிவித்தார். போட்டியின் பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“இது துடுப்பெடுத்தாடுவதற்கு எளிதான ஆடுகளம் அல்ல. ஆனால் அழுத்தங்களை சிறந்த முறையில் கையாண்டு இமாத் வசிம் விளையாடிய விதம் பாராட்டத்தக்கது. இந்த ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடிப்பது எளிதான விடயம் அல்ல என்பதை நாங்கள் அறிவோம், ஏனெனில் அவர்களின் (ஆப்கானிஸ்தான்) பந்து வீச்சாளர்கள் நிலைமைகளை நன்றாகப் பயன்படுத்தி பந்து வீசியிருந்தனர்.
உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இருந்து வெளியேறும் நுவன் பிரதீப்
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான………..
அதேபோல, துடுப்பாட்டத்தில் பாபர் அசாமும், இமாமுல் ஹக்கும் மிகச் சிறப்பாக விளையாடினர். எங்களுக்கு மத்திய வரிசையில் ஒரு இணைப்பாட்டம் தேவைப்பட்டது. அந்த பொறுப்பை இந்தப் போட்டியில் எந்த வீரரும் செய்யவில்லை” என தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின் போது பாகிஸ்தான் ஒருபோதும் சிறந்த சேஸர்களாக இருந்ததில்லை. மறுபுறத்தில், வேகப் பந்துவீச்சாளர்களில் இளம் வீரர் சஹீன் ஷா அப்ரிடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இது அணியின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி இதுவாகும். உலகக் கிண்ணத்தில் வெற்றி பெறுவதென்பது இலகுவான காரியம் அல்ல என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். ஆனால், நாங்கள் அதை போட்டியாக எடுத்துக்கொண்டோம்.
பந்துவீச்சை பொறுத்தமட்டில் சஹீன் ஷா அப்ரிடி நாளுக்கு நாள் முன்னேறி வருகிறார், அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஏனைய பந்து வீச்சாளர்களும் நன்றாக பந்து வீசினர்” என்று கூறினார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<