இணையம் வழியாக கிரிக்கெட் சொல்லிக் கொடுக்கும் டோனி, அஸ்வின்

79

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரான மஹேந்திரசிங் டோனி மற்றும் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இணையத்தளம் மூலம் பயிற்சி அளித்து வருகின்றனர்.  

சர்வதேச அளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் மக்களை வீட்டிலேயே முடக்கியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

டோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள் – இங்கிலாந்து வீரர் எச்சரிக்கை

தலைமுறையில் ஒரு முறை மட்டுமே தோன்றும் வீரர் டோனி என்றும் …..

இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மக்களை போலவே வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.   

இந்த இக்கட்டான நேரத்திலும் விளையாட்டு வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்க வீட்டிலேயே தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

அதேபோல, சர்வதேச வீரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட உடற்தகுதி அட்டவணையை பின்பற்றுகிறார்களா என்பதை ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் கண்கானித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களான டோனி, அஸ்வின் ஆகியோர் தங்களின் விளையாட்டு அகடமியின் மூலமாக இணையத்தளம் வாயிலாக வழக்கமான கிரிக்கெட் பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.   

டோனி தனது கிரிக்கெட் அகடமி மூலமாக பயிற்சியாளர்களுக்கு தகவல்களை வழங்கி அதன் மூலம் வகுப்புகள் எப்படி செல்கிறது என்பதை கண்கானித்து வருகிறார். மேலும், பேஸ்புக் நேரலை மூலமாகவும் பயிற்சிகளை நேரடியாக பார்த்து வருகிறார்

அதேபோல சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் தனது அகடமியில் இணையம் மூலமாக நேரடியாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்

இவ்விரண்டு வீரர்களினதும் இந்த இணையத்தள வகுப்புகள் அந்நாட்டு மக்களை மிகப் பெரிய அளவில் கவர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

டோனி அகடமியின் தலைமை பயிற்சியாளர் சத்ரஜித் லஹிரி கூறுகையில், “ஒவ்வொரு வீடியோக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பதிவேற்றப்படும் அனைத்து தளத்திலும் ஒவ்வொரு வீடியோக்களுக்கும் குறைந்தபட்சமாக 10 ஆயிரம் பார்வையாளர்கள் வருகின்றனர்” என்றார்.  

மேலும், “கிரிக்கெட்டர் என்ற செயழி உள்ளது. அதில் பயிற்சி வகுப்புகளை நாங்கள் பதிவேற்றுவோம். பயிற்சி மேற்கொள்பவர்களும் அவர்களின் வீடியோக்களை பதிவேற்றம் செய்வார்கள். அதைப் பார்த்துவிட்டு நாங்கள் எங்களின் கருத்துக்களை தெரிவிப்போம்.  

5 ஆயிரம் பேருக்கு ஒரு மாத உணவுப்பொருள் வழங்கிய சச்சின்

மும்பையில் சுமார் 5000 பேருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான …….

பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களும் அவர்களுக்கு வழங்கப்படும் தகவல்களை நன்கு புரிந்து கொண்டு செயல்படுகின்றனர். மாற்றம் தேவை என்றால் அதை புரிந்து கொண்டு சரி செய்து கொள்கின்றனர்” என்றார்.  

இந்த நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வித்யுத் சிவராமகிருஷ்ணனும் லுடிமோஸ் என்ற இணையத்தளம் மூலமாக கிரிக்கெட் பயிற்சிகளை அளித்து வருகின்றார்

முன்னதாக பாகிஸ்தான் கிரக்கெட் அணி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை வீடியோ மூலம் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்ததுடன், எதிர்வரும் 20ஆம், 21ஆம் திகதிகளில் வீடியோ மூலம் வீரர்களிடம் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<