தென்னாபிரிக்க தொடரிலிருந்து விலகும் தனன்ஞய டி சில்வா

232
Getty Images

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாளில், காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, இலங்கை அணியின் சகலதுறை வீரரான தனன்ஞய டி சில்வா இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாளில், தென்னாபிரிக்க அணிக்கெதிராக 79 ஓட்டங்களை பெற்ற நிலையில், வேகமாக ஓட்டம் ஒன்றினை பெற முயற்சிக்கும் போது தனன்ஞய டி சில்வாவில் கால் தொடையில் உபாதை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். 

சந்திமால் – தனன்ஞய இணைப்பாட்டத்தில் வலுப்பெற்ற இலங்கை

தொடர்ந்து தனன்ஞய டி சில்வாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு தொடையில் 2ஆம் நிலை உபாதை வந்துள்ளது தெரியவந்துள்ளது. 

இதன் காரணமாக டி சில்வா 2 வாரங்களுக்கு விளையாட முடியாத  சூழ்நிலை ஏற்பட்டுளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக நடைபெறும் தென்னாபிரிக்க தொடரில் இருந்து விலகும் தனன்ஞய டி சில்வா, ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

இது இலங்கை குழாமில் ஏற்பட்ட  நான்காவது உபாதையாகும் 

  1. ஒஷத பெர்ணான்டோ – கணுக்கால் உபாதை
  2. அன்செலோ மெதிவ்ஸ் – தொடை எலும்பு உபாதை
  3. சுரங்க லக்மால் – தொடை எலும்பு உபாதை
  4. தனன்ஞய டி சில்வா – தொடை உபாதை 

  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<