Home Tamil சுபர் ஓவரில் இலங்கைக்கு த்ரில் வெற்றி

சுபர் ஓவரில் இலங்கைக்கு த்ரில் வெற்றி

2536
Sri Lanka tour New Zealand 2023

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான விறுவிறுப்பான முதல் T20i போட்டியில் இலங்கை அணி சுபர் ஓவரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

தொடர் விக்கெட்டுக்களால் இலங்கை இளம் கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் T20i போட்டி ஓக்லேண்ட் நகரின் ஈடன் பார்க் அரங்கில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் டொம் லேதம் முதலில் இலங்கை வீரர்களை துடுப்பாடப் பணித்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் குசல் ஜனித் பெரேராவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்க, நியூசிலாந்து ஹென்ரி சிப்லி மற்றும் சாட் போவ்ஸ் ஆகிய இருவருக்கும் T20i அறிமுகம் வழங்கியிருந்தது.

இலங்கை  XI

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, பிரமோத் மதுசான், டில்சான் மதுசங்க

நியூசிலாந்து XI

டிம் செய்பார்ட், சாட் போவ்ஸ், டொம் லேதம், ரச்சின் ரவிந்திர, டேரைல் மிச்சல், ஜேம்ஸ் நீஷம், இஸ் சோதி, அடம் மில்னே, மார்க் சாப்மன், ஹென்ரி சிப்லி, பென் லிஸ்டர்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த பெதும் நிஸ்ஸங்க முதல் பந்திலேயே அடம் மில்னேவின் பந்துவீச்சில் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றம் வழங்கினார். எனினும் களத்தில் இருந்த குசல் மெண்டிஸ் அதிரடியான ஆரம்பத்தினை வழங்கியதோடு, வெறும் 09 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 25 ஓட்டங்கள் பெற்றார்.

குசல் மெண்டிஸின் பின்னர் புதிய வீரராக வந்த தனன்ஞய டி சில்வாவின் விக்கெட் பறிபோனது. தனன்ஞய டி சில்வா 10 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 15 ஓட்டங்கள் எடுத்தார். தனன்ஞயவின் விக்கெட்டின் பின்னர் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் ஆடிய சரித் அசலன்க – குசல் ஜனித் பெரேரா ஜோடி இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு அது இலங்கை பலமான நிலை ஒன்றினை அடைவதற்கும் காரணமாக அமைந்தது.

தொடர்ந்து சரித் அலசன்கவின் விக்கெட்டினை அடுத்து வனிந்து ஹஸரங்கவின் இறுதி நேர அதிரடியோடு இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சரித் அசலன்க தன்னுடைய நான்காவது T20i அரைச்சதத்தோடு 41 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசல் ஜனித் பெரேரா தன்னுடைய 13ஆவது T20i அரைச்சதத்தோடு  45 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 53 ஓட்டங்கள் எடுத்தார். இறுதிநேர அதிரடியினை வெளிப்படுத்திய வனிந்து ஹஸரங்க 11 பந்துகளில் 02 சிக்ஸர்கள் அடங்கலாக 21 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தின் பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, ஹென்ரி சிப்லி, பென்ஜமின் லிஸ்டர் மற்றும் அடம் மில்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 197 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணிக்கு மகீஷ் தீக்ஷன மற்றும் டில்சான் மதுசங்க ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே அழுத்தம் உருவாக்கினர். இதனால் நியூசிலாந்து 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் மூன்றாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டொம் லேதம் மற்றும் டேரைல் மிச்சல் ஆகிய இருவரும் சற்று அதிரடியாக ஆடி அணியினை சரிவில் இருந்து மீட்டனர். இந்த நிலையில் நியூசிலாந்தின் மூன்றாம் விக்கெட்டாக பிரமோத் மதுசானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த டொம் லேதம் 16 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்கள் எடுத்தார்.

T20 தொடரில் விட்ட தவறுகளை சரி செய்யுமா இலங்கை?

இதன் பின்னர் மார்க் சாப்மன் மற்றும் டேரைல் மிச்சல் ஜோடி நியூசிலாந்து அணிக்காக அதிரடி இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கியது. அதன்படி 66 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டம் வனிந்து ஹஸரங்க, மார்க் சாப்மனின் விக்கெட்டினைக் கைப்பற்ற நிறைவுக்கு வந்தது. தனன்ஞய டி சில்வாவிடம் பிடியெடுப்பினை வழங்கிய மார்க் சாப்மன் 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனையடுத்து களத்தில் ஆட்டமிழக்காது இருந்த டேரைல் மிச்சல் மற்றும் பின்வரிசையில் அதிரடி காட்டிய ரவிந்திர ரச்சின் ஆகியோரின் துடுப்பாட்டத்தோடு, நியூசிலாந்து அணி போட்டியின் வெற்றி இலக்கினை நெருங்கியதோடு 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் போட்டி சமநிலை அடைய ஆட்டம் சுபர் ஓவருக்கு சென்றது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் டேரைல் மிச்சல் 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் போட்டி இறுதி ஓவர் வரை செல்வதற்கு காரணமாக அமைந்த ரச்சின் ரவிந்திர 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் உடன் 26 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க மற்றும் ப்ரமோத் மதுசான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து சுபர் ஓவரில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணியானது 09 ஓட்டங்களை போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த வெற்றி இலக்கினை சரித் அலசன்கவின் அதிரடியோடு இலங்கை வீரர்கள் இரண்டு பந்துகளில்  12 ஓட்டங்களுடன் அடைந்தனர். அசலன்க இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 10 ஓட்டங்கள் எடுத்தார்.

அத்துடன் இப்போட்டியின் வெற்றியானது இலங்கை அணி 8 வருடங்களின் பின்னர் நியூசிலாந்து மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற முதல் வெற்றியாகவும் மாறியது.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் துடுப்பாட்டவீரரான சரித் அலசன்க தெரிவு செய்யப்பட்டார். அடுத்ததாக நியூசிலாந்து – இலங்கை அணிகள் பங்கெடுக்கும் T20 தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை (05) டனடின் நகரில் நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


New Zealand
196/8 (20)

Sri Lanka
196/5 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Tom Latham b Adam Milne 0 1 0 0 0.00
Kusal Mendis c Rachin Ravindra b Henry Shipley 25 9 3 2 277.78
Kusal Perera not out 53 45 4 1 117.78
Dhananjaya de Silva c Ish Sodhi b James Neesham 15 10 1 1 150.00
Charith Asalanka c Tim Seifert b Benjamin Lister 67 41 2 6 163.41
Dasun Shanaka c Adam Milne b James Neesham 1 3 0 0 33.33
Wanindu Hasaranga not out 21 11 0 0 190.91


Extras 14 (b 0 , lb 5 , nb 0, w 9, pen 0)
Total 196/5 (20 Overs, RR: 9.8)
Bowling O M R W Econ
Adam Milne 4 0 42 1 10.50
Benjamin Lister 4 0 43 1 10.75
Henry Shipley 4 0 43 1 10.75
James Neesham 4 0 30 2 7.50
Ish Sodhi 4 0 33 0 8.25


Batsmen R B 4s 6s SR
Chad Bowes b Dilshan Madushanka 2 3 0 0 66.67
Tim Seifert lbw b Mahesh Theekshana 0 3 0 0 0.00
Tom Latham c Nuwanidu Fernando b Pramod Madushan 27 16 5 0 168.75
Daryl Mitchell c Dhananjaya de Silva b Dasun Shanaka 66 44 5 3 150.00
Mark Chapman c Dhananjaya de Silva b Wanidu Hasaranga 33 23 2 2 143.48
James Neesham c Pramod Madushan b Wanindu Hasaranga 19 10 2 1 190.00
Rachin Ravindra c Wanindu Hasaranga b Dasun Shanaka 26 13 2 2 200.00
Adam Milne c Charith Asalanka b Pramod Madushan 3 4 0 0 75.00
Henry Shipley not out 1 1 0 0 100.00
Ish Sodhi not out 10 4 0 1 250.00


Extras 9 (b 6 , lb 0 , nb 1, w 2, pen 0)
Total 196/8 (20 Overs, RR: 9.8)
Bowling O M R W Econ
Mahesh Theekshana 4 0 22 1 5.50
Dilshan Madushanka 3 0 45 1 15.00
Pramod Madushan 4 0 37 2 9.25
Chamika Karunaratne 3 0 36 0 12.00
Wanindu Hasaranga 4 0 30 2 7.50
Dasun Shanaka 2 0 20 2 10.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<