சகலதுறை ஆட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தனன்ஜய டி சில்வா

1387

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் ஒருமாத காலமாக நடைபெற்று வந்த கிரிக்கெட் தொடர், ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (14) நடைபெற்ற T-20 போட்டியுடன் நிறைவுக்கு வந்தது.

நேற்றைய போட்டியில் 3 விக்கெடுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த தனன்ஜய டி சில்வா துடுப்பாட்டத்தில் 31 ஓட்டங்களையும் பந்து வீச்சில், 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து முக்கியமான 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

தனஞ்சயவின் சகலதுறை ஆட்டத்தால் T-20 தொடரை வென்ற இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று (14) நடைபெற்ற ஒரு போட்டி…

இலங்கை அணியின் வெற்றிக்கு சகல துறையிலும் பிரகாசித்த இவர், போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியளார்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்டார்.

போட்டியில் துடுப்பெடுத்தாடிய விதம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சு பலம் மிக்கது என்பதை நாம் அறிந்திருந்தோம்.  இதனால் தொடர்ந்து அதற்கான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தோம்.

ஆரம்பத்தில் நாம் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், அணிக்கு சற்று தடுமாற்றம் இருந்தது. நானும், சந்திமாலும் ஒரே விதமான துடுப்பாட்ட பாணியை கொண்டுள்ளவர்கள். இதனால் ஓட்டவேகம் குறைந்து விடும் என எண்ணி நான் கிடைக்கும் பந்துகளை பௌண்டரிகள் விளாச முற்பட்டேன். அதில் சில பௌண்டரிகள் பெறப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தேன்.

இதுபோன்ற சிறப்பான ஆட்டங்களை நாம் வழங்கும் போது அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும். நாம் அணிக்காக ஓட்டங்களையும், விக்கெட்டுகளையும் பெற்றுக்கொடுத்தால் அணியின் பலம் அதிகரிக்கும். ஆனால், சில நேரங்களில் பிரகாசிக்க தவறும் போது போட்டியின் முடிவுகள் எதிரணிக்கு சாதகமாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால் இன்றைய தினம் (நேற்று) எமக்கு சிறப்பான நாளாக அமைந்து விட்டது.

சகலதுறை வெளிப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து,

கிரிக்கெட்டின் தற்போதைய நிலையை பொருத்தவரையில் அணியொன்றை வலுப்படுத்துவதற்கு சகலதுறை ஆட்டங்களின் வெளிப்பாடு முக்கியமாக அமைகின்றது. துடுப்பாட்ட வீரர் ஒருவர் அணிக்காக பந்துவீச வேண்டும். அத்துடன் பந்து வீச்சாளர்கள் தேவையான நேரங்களில் அணிக்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுப்பவர்களாக இருக்கவும் வேண்டும்.

இவ்வாறு பந்து வீச்சாளர்களும், துடுப்பாட்ட வீரர்களும் தங்களுடைய திறமையை இரண்டு பக்கத்திலும் பலப்படுத்திக் கொள்ளும் போது, சரியான அணியொன்றை தெரிவுசெய்வதற்கு இலகுவாக இருக்கும்

குறைந்த ஓட்டங்கள் பெற ஆடுகளமா காரணம் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தனன்ஜய,  

இன்றைய (நேற்று) போட்டியை பொருத்தவரை ஆடுகளத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கவில்லை. இறுதி ஒருநாள் போட்டியை விட துடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று மெதுவாக பந்து வருவதனை உணர முடிந்தது. இதனால் ஆடுகளத்தில் தவறு இருக்கவில்லை.

எமது அணியின் பந்து வீச்சு போட்டியின் திருப்புமுனையாக அமைந்திருந்தது. முதல் ஆறு ஓவர்களுக்குள் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்த்தப்படும் போது, எந்தவொரு அணிக்கும் அதன்பின் துடுப்பெடுத்தாடுவது கடினமாகதான் இருக்கும். எமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டனர் என்றுதான் கூறவேண்டும்

UAE T20x தொடருடன் இணையும் ஏபி டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து இவ்வருடம் ஓய்வுபெற்ற முன்னணி கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ், ஐக்கிய அரபு …

தனஞ்சய டி சில்வா கையாளும் துடுப்பாட்ட பாணி

கிரிக்கெட்டின் எந்தவொரு வகையான போட்டியாக இருந்தாலும் அணி வெற்றிபெறுவதற்கு, ஓட்டங்களை குவிக்க வேண்டியது முக்கியம். ஓட்டங்களை பெறுவதற்கு பந்தை அடிக்க வேண்டும். எனது எண்ணமும் அப்படிதான். பந்தை அடித்து ஓட்டங்களை பெறவேண்டும் என்பதே எனது துடுப்பாட்ட பாணி. தற்போது எனக்கு இந்த முறையிலான துடுப்பாட்டம் சரியாக இருக்கிறது என்பதை உணர்கிறேன்எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மூன்று வகையான போட்டிகளிலும், அணியில் தற்போது அதிக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறன. வகுக்கும் திட்டங்கள் சரியாக மைதானத்தில் கையாளப்படுகின்றன.  பயிற்றுவிப்பாளர்களின் ஆலோசனைகளும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதுஎன குறிப்பிட்ட அவர், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.