மேற்கிந்தி தீவுகள் செல்லும் நியூசிலாந்து குழாம் அறிவிப்பு!

India tour of West Indies 2022

79
Williamson, Boult return for Caribbean white-ball tour

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியானது அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20I போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

>> அழைப்பு T20 தொடரை ஒழுங்கு செய்த இலங்கை கிரிக்கெட் சபை

இதில் நியூசிலாந்து அணியானது T20I மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களுக்கும் 15 பேர்கொண்ட ஒரே குழாத்தை அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்துக்குள் கேன் வில்லியம்ஸன் தலைவராக மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், டிரெண்ட் போல்ட், டிம் சௌதி மற்றும் டெவோன் கொன்வே ஆகிய முன்னணி வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதில் டெவோன் கொன்வே, டிம் சௌதி மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் கடந்த ஆண்டு நடைபெற்ற T20I உலகக்கிண்ணம் மற்றும் இந்திய தொடர்களில் இறுதியாக விளையாடியதுடன், முதன்முறையாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அனுபவ வீரர்களான மார்டின் கப்டில், ஜிம்மி நீஷம், இஸ் சோதி ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அயர்லாந்து தொடரில் சிறப்பாக ஆடிய மைக்கல் பிரேஷ்வல் மற்றும் பின் எலன் ஆகிய இளம் வீரர்களும் குழாத்தில் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

இதேவேளை நியூசிலாந்து அணியானது இறுதியாக 2014ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததுடன், சுமார் 8 வருடங்களுக்கு பின்னர் அடுத்த மாதம் அங்கு செல்லவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20I தொடர் அடுத்த மாதம் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஒருநாள் தொடர் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து குழாம்

கேன் வில்லியம்ஸன் (தலைவர்), பின் எலன், டிரெண்ட் போல்ட், மைக்கல் பிரேஸ்வல், டெவோன் கொன்வே, லொக்கி பேர்கஸன், மார்டின் கப்டில், மெட் ஹென்ரி, டொம் லேத்தம், டார்லி மிச்சல், ஜிம்மி நீஷம், கிளேன் பிலிப்ஸ், மிச்சல் சென்ட்னர், இஸ் சோதி, டிம் சௌதி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<