இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்கொட்லாந்து; சுவீடனுக்கு முதல் வெற்றி

UEFA EURO 2020

101
UEFA EURO

யூரோ 2020 கால்பந்து தொடரில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற இரண்டு போட்டிகள் சமநிலையில் நிறைவடைய, ஸ்லோவாக்கியா அணிக்கு எதிரான போட்டியை சுவீடன் வெற்றி கொண்டது. 

சுவீடன் எதிர் ஸ்லோவாக்கியா 

தமது முதல் போட்டியை போலந்துக்கு எதிராக வெற்றி கொண்ட ஸ்லோவாக்கியா அணியும், ஸ்பெயின் அணியுடனான போட்டியை சமன் செய்த சுவீடன் அணியும் E குழுவுக்கான தமது இரண்டாவது போட்டியில் மோதின.

ரொனால்டோவுக்கு இரட்டை கோல்; ஜெர்மனியை வீழ்த்திய பிரான்ஸ்

ரஷ்யாவின் Krestovsky அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் எந்தவொரு அணியும் கோல் பெறவில்லை. 

இந்நிலையில் தமது முதல் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த சுவீடன் அணிக்கு 70ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மத்திய கள வீரர் Emil Forsberg கோலாக்கினார்.  இதுவே இந்த போட்டியில் பெறப்பட்ட ஒரே கோலாக இருந்தது. 

இந்த போட்டி முடிவுடன் E குழுவில் சுவீடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், ஸ்லோவாக்கியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 

முழு நேரம்: சுவீடன் 1 – 0 ஸ்லோவாக்கியா 

கோல் பெற்றவர்கள் 

  • சுவீடன் – Emil Forsberg 70’(P)

குரோசியா எதிர் செக் குடியரசு

குழு D இற்காக ஸ்கொட்லாந்தின் ஹம்ட்டன் அரங்கில் இடம்பெற்ற இந்த மோதலின் முதல் பாதியில் VAR சோதனையின் பின்னர் கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது செக் குடியரசு வீரர் பட்ரிக் சிக் முதல் கோலைப் பெற்றார். 

எனினும், இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களில் குரோசிய வீரர் இவன் பெரிசிக் போட்டியை சமப்படுத்துவதற்கான கோலைப் பெற்றார். எஞ்சிய 45 நிமிடங்களிலும் இரண்டு அணி வீரர்களும் கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் அவரை பயனளிக்காத நிலையில் ஆட்டம் தலா ஒரு கோலுடன் நிறைவு பெற்றது. 

முழு நேரம்: குரோசியா 1 – 1 செக் குடியரசு

கோல் பெற்றவர்கள்   

  • குரோசியா – இவன் பெரிசிக் 47’  
  • செக் குடியரசு – பட்ரிக் சிக் 37’ (P)

கால்பந்து உலகை கண்கலங்க வைத்த Christian Eriksen | Football Ulagam

இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து

இங்கிலாந்து தமது முதல் போட்டியை ஆடிய வெம்ப்லி அரங்கில் இடம்பெற்ற குழு D இற்கான இந்த மோதலின் முதல் பாதியில் இங்கிலாந்து வீரர்கள் கோலுக்கான சிறந்த வாய்ப்புகள் பலவற்றைப் பெற்ற போதும், அவற்றை சிறப்பாக நிறைவு செய்யவில்லை. எனவே, முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவடைந்தது. 

இரண்டாம் பாதியிலும் எந்தவொரு அணியினராலும் கோல்களைப் பெற ் முடியாமல் போக, போட்டி நிறைவில் பிபா தரவரிசையில் 44ஆவது இடத்தில் உள்ள ஸ்கொட்லாந்து 4ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்துக்கு கோல்களை விட்டுக் கொடுக்காமல் போட்டியை சமன் செய்தது. 

இந்த முடிவினால், இங்கிலாந்து அணி D குழுவில் செக் குடியரசு அணியுடன் 4 புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டது. எனினும், கோல் வித்தியாசத்தில் செக் குடியரசு அணி குழுவில் முதல் இடத்தில் உள்ளது.  

முழு நேரம்: இங்கிலாந்து 0 – 0 ஸ்கொட்லாந்து

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<