ஹஸரங்கவின் அணியில் பயிற்றுவிப்பாளராகும் டேல் ஸ்டெய்ன்

Major League Cricket 2023

713

அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடருக்கான வொசிங்டன் பிரீடம் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக டேல் ஸ்டெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் இறுதியாக சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்த நிலையில், தற்போது வொசிங்டன் பிரீடம் அணியுடன் இணையவுள்ளார்.

“வாய்ப்புக்காக நான் தேர்வாளர்களை தேடிச்செல்வதில்லை” – திமுத் கருணாரத்ன

டேல் ஸ்டெய்ன் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் கிரெக் ஷிப்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

IPL தொடரில் டெல்லி டேர்டெவில்ஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக 4 ஆண்டுகள் செயற்பட்டிருந்த இவர், அதனைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு பிக் பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

பயிற்றுவிப்பாளர்களை மாத்திரமின்றி அணியின் தலைவரையும் வொசிங்டன் பிரீடம் அணி அறிவித்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் மொய்ஷஷ் ஹென்ரிக்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மொய்ஷஷ் ஹென்ரிக்ஸ் பிக் பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்ததுடன், இரண்டு தடவைகள் அந்த அணி கிண்ணத்தையும் இவரின் தலைமையின் கீழ் வெற்றிக்கொண்டிருந்தது.

வொசிங்டன் பிரீடம் அணியில் இலங்கை அணியைச் சேர்ந்த வனிந்து ஹஸரங்க இணைக்கப்பட்டுள்ளதுடன், அன்ரிக் நோக்கியா, கிளேன் பிலிப்ஸ், மார்கோ ஜென்சன் மற்றும் அடம் மில்ன் போன்ற முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் ஜூலை 13 முதல் 30ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், தொடரில் ஆறு அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<