டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியை அபார பந்து வீச்சால் மிரட்டிய கெவுமல்

175

சிங்கர் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று முடிந்த B குழுவுக்கான போட்டியில் கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியை எதிர்கொண்ட மொறட்டுவ பிரின்ஸ் ஒப் வெல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 101 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இரண்டு சதங்களுடன் நிறைவுற்ற புனித ஜோசப் வாஸ் – குருகுல மோதல்

சிங்கர் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை….

மத்தேகொட செப்பர் மைதானத்தில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் கெவுமல் நாணயகாரவின் அபார பந்து வீச்சிற்கு தாக்குப்பிடிக்க முடியாத கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 101 மற்றும் 69 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது.

நேற்று ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவ்வணிசார்பில் அமித்த டபரே மாத்திரம் தனித்து நின்று போராட ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் கெவுமலின் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அமித்த டபரே ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி 50.2 ஓவர்கள் நிறைவில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்து வீசிய கெவுமல் நாணயகார 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பிரின்ஸ் ப் வேல்ஸ் கல்லூரி அணி, தேவக பீரிஸ், டில்ஷான் டி மெல் மற்றும் கெவுமல் நாணயகார ஆகியோரின் சிறந்த துடுப்பாட்ட உதவியுடன் 271 ஓட்டங்களை குவித்தது. தேவக பீரிஸ் 61 ஓட்டங்களையும், கெவுமல் நாணயகார 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, டில்ஷான் டி மெல் 38 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் மெதுசன் குமார 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கன்னிப் போட்டியில் சதமடித்த இளம் ப்ரித்திவ் ஷாவ்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ராஜ்கோட்டில்…..

இதனையடுத்து, 170 ஓட்டங்கள் பின்னடைவுடன் துடுப்பெடுத்தாடிய டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி முதல் இன்னிங்ஸை விடவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. மீண்டும் சிறப்பாக பந்து வீசிய பிரின்ஸ் ப் வேல்ஸ் அணியின் கெவுமல் நாணயகார 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்த, டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி 69 ஓட்டங்களுக்கு சுருண்டு, 101 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி சார்பில் முதுத் லக்ஷான் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

போட்டி சுருக்கம்

டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி

  • முதல் இன்னிங்ஸ்101 (50.2), அமித்த டபரே 63*, கெவுமல் நாணயகார 27/5
  • இரண்டாவது இன்னிங்ஸ்66 (27.1), முதுத் லக்ஷான் 28, கெவுமல் நாணயகார 26/6

பிரின்ஸ் ஓஃப் வேல்ஸ் கல்லூரி

  • முதல் இன்னிங்ஸ்271 (78.4), தேவக பீரிஸ் 61, கெவுமல் நாணயகார 36, டில்ஷான் டி மெல் 38, மெதுசன் குமார 66/4

போட்டி முடிவு –  பிரின்ஸ் ஓஃப் வேல்ஸ் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 101 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<