இலங்கை – பங்களாதேஷ் தொடரில் பார்வையாளர்கள் இல்லை

278

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையில் இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

ஹட்ரிக் சம்பியன் பட்டம் வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரண்டு கிரிக்கெட் அணிகளும் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக விளையாடவுள்ள இந்த டெஸ்ட் தொடர் பற்றி இன்று இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) தலைமயகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே இந்த தொடரில் பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டர்கள் என்னும் விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அதேவேளை இந்த டெஸ்ட் தொடரின் போது ஊடகவியலாளர்கள் மைதானத்திற்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

பெங்களூர் அணியின் இரண்டாவது வீரருக்கு கொவிட்-19!

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 21ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 29ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 03ஆம் திகதி வரையிலும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்றது. 

இதேவேளை, இந்த டெஸ்ட் தொடருக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இலங்கை வருவதோடு, டெஸ்ட் தொடர் ஆரம்பமாக முன்னர் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றிலும் எதிர்வரும் 17ஆம் திகதி விளையாடவிருக்கின்றது. 

 மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க …