நட்பு ரீதியிலான போட்டிக்காக மலேசியா செல்லும் இலங்கை அணி

91

இலங்கை கால்பந்தாட்ட அணியானது மலேசிய அணியுடன் சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியொன்றில் அடுத்த மாதம் மோதவுள்ளது என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. 

தென்கொரியா அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண மற்றும் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள AFC ஆசியக் கிண்ணத் தொடர்களுக்கான தகுதிகாண் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இலங்கை அணி, இந்த நட்புரீதியிலான போட்டியில் மோதவுள்ளது.

2020 SAFF சம்பியன்ஷிப் பங்களாதேஷில்: தொடர்ந்து புறக்கணிக்கும் இலங்கை

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய….

இந்தப் போட்டிக்காக இலங்கை கால்பந்தாட்ட அணி மலேசியா செல்லவுள்ளதுடன், போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 5ம் திகதி பகிட் ஜெலில் அரங்கில் இலங்கை நேரப்படி பிற்பகல் 6.15 இற்கு நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை அணி, மலேசிய அணியை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டிருந்த போதும், மலேசிய அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. இந்தப் போட்டியில் மலேசிய அணியில் அறிமுகமாகியிருந்த மொஹமது சுமேரா இண்டாவது பாதியில் மேலதிக வீரராக உள்வந்து போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார். 

இந்த தொடருக்கு முன்னதாக, மலேசிய அணி 2012ம் ஆண்டு இலங்கைக்கு வருகைத்தந்திருந்ததுடன், குறித்தப் போட்டியில் 6-0 என்ற அபார வெற்றியை மலேசிய அணி பெற்றிருந்தது. எனினும், அதற்கு முன்னர் 2007ம் ஆண்டு மலேசிய அணியை எதிர்கொண்டிருந்த இலங்கை அணி, 2-1 என அந்த அணியை வீழ்த்தியிருந்தது. 

Photos: International Friendly – Sri Lanka Vs Malaysia

ThePapare.com | Waruna Lakmal | 13/10/2018 Editing and re-using….

அதேவேளை, இந்தப் போட்டித் தொடருக்காக எதிர்வரும் 3ம் திகதி இலங்கை அணி, மலேசியா நோக்கி புறப்படவுள்ளதுடன், 5ம் திகதி போட்டியில் விளையாடவுள்ளது. குறித்த போட்டியை தொடர்ந்து, மலேசியாவிருந்து ஒக்டோபர் 7ம் திகதி தென் கொரியா நோக்கி பயணிக்கும் இலங்கை அணி, 10ம் திகதி பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டித் தொடரின் முதலாவது லெக்கில் தென் கொரிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

குறித்தப் போட்டியினை முடித்துக்கொள்ளும் இலங்கை அணி மீண்டும் நாடு திரும்பி, எதிர்வரும் 15ம் திகதி, பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டித் தொடருக்கான முதல் லெக் போட்டியில் லெபனான் அணியுடன் கொழும்பில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க