ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைவது மேலும் உறுதி

489

ஒலிம்பிக்கில் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் விளையாட்டினை இணைப்பதற்கான சாத்தியப்பாடுகள் இன்னும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

லெஜண்ட்ஸ் தொடரில் விளையாடவுள்ள முரளி, கங்குலி, மோர்கன்!

அதன்படி 2028ஆம் ஆண்டுக்குரிய லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தவிருக்கும் அமைப்பு, சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ICC) கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான முன்னிலைப்படுத்துகையினை (Presentation) தம்மிடம் இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டுள்ளதாக Cricbuzz செய்தி இணையத்தளம் தெரிவித்திருக்கின்றது.

எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் உள்ளடக்கப்பட்ட 28 விளையாட்டுக்கள் தொடர்பிலான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியாகியிருந்தது. எனினும் இந்த அறிவிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த கிரிக்கெட் விளையாட்டு காணப்பட்டிருக்கவில்லை. இதனால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைக்கப்படுவது தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவி வந்திருந்தது. ஆனால் கிரிக்கெட் தொடர்பான முன்னிலைப்படுத்துகை தற்போது சமர்ப்பிக்கப்பட கூறப்பட்டிருக்கும் நிலையில் கிரிக்கெட்டினை ஒலிம்பிக்கில் இணைப்பது தொடர்பிலான சாத்தியப்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.

சந்தகனின் போராட்டத்தினை தாண்டி இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன்

இதேநேரம், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) நிகழ்வுக்கு முன்னர், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டினை இணைப்பது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாக எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் கிரிக்கெட் அடங்கலாக இன்னும் ஒன்பது விளையாட்டுக்களை ஒலிம்பிக்கில் இணைப்பதற்காக முன்னிலைப்படுத்துகைகள் குறித்த விளையாட்டுகளுக்கு பொறுப்பாக இருக்கும் அமைப்புக்களிடம் கேட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சுமார் ஒரு பில்லியனுக்கு மேலான இரசிகர்களை கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டு, ஒலிம்பிக்கில் இணைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அது T20 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<