இளையோர் ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கையில்!

106

19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் ஆசிய கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 5ம் திகதி முதல் 14ம் திகதிவரை இலங்கையில் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் கீழ் உள்ள 8 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்துள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி செப்டம்பர் 14ம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நிசங்கவின் சதத்துடன் ஒருநாள் தொடர் இலங்கை வளர்ந்துவரும் அணி வசம்

உத்தியோகபூர்வற்ற இருதரப்பு கிரிக்கெட் தொடருக்காக…..

பங்கேற்கும் 8 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவதுடன், குழுநிலையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

இம்முறை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் ஆசியக் கிண்ணத் தொடருக்கான நேரடித் தகுதியினை டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுள்ள இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பெற்றுள்ளன.

அதேநேரம், மிகுதியுள்ள 3 இடங்களுக்கான அணிகள், இரண்டு வெவ்வேறு இரண்டு தகுதிகாண் தொடர்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை மேற்கு ஆசியாவுக்கான தகுதிகாண் தொடரிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளதுடன்,  கிழக்கு ஆசியா தகுதிகாண் போட்டிகளில் இருந்து நேபாளம் தகுதிபெற்றுள்ளது. 

போட்டியிடவுள்ள 8 அணிகள்

குழு A குழு B
இந்தியா U19 இலங்கை U19
ஆப்கானிஸ்தான் U19 பங்களாதேஷ் U19
பாகிஸ்தான் U19 ஐக்கிய அரபு இராச்சியம் U19
குவைத் U19 நேபாளம் U19

 

இம்முறை நடைபெறவுள்ள இளையோர் ஆசியக் கிண்ணத்துக்கான போட்டிகள் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த 6 மைதானங்களில் நடைபெறவுள்ளன. கொழும்பு கிரிக்கெட் கழகம், பி. சரா ஓவல், ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானம், மொறட்டுவ டி ஷொய்சா கிரிக்கெட் மைதானம், என்.சி.சி. மைதானம் மற்றும் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றில் நடைபெறவுள்ளன.

நியூசிலாந்துடன் மோதவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி வெளியீடு

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில்….

இதேவேளை, இறுதியாக நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியனாக இந்திய அணி முடிசூடியிருந்ததுடன், இரண்டாவது இடத்தை இலங்கை அணி பெற்றிருந்தது. அதேநேரம், 2016ம் ஆண்டு இளையோர் ஆசிய கிண்ணப் போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

திகதி போட்டி மைதானம்
5/9/2019 இந்தியா எதிர் குவைத் கொழும்பு கிரிக்கெட் கழகம்
ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் பி. சரா ஓவல்
6/9/2019 இலங்கை எதிர் நேபாளம் ஆர்.பிரேமதாஸ
பங்களாதேஷ் எதிர் ஐ.அ.இ (UAE) சிலாபம் மேரியன்ஸ்
7/9/2019 இந்தியா எதிர் பாகிஸ்தான் மொறட்டுவ டி ஷொய்சா
ஆப்கானிஸ்தான் எதிர் குவைத் ஆர்.பிரேமதாஸ
8/9/2019 இலங்கை எதிர் ஐ.அ.இ (UAE) சிலாபம் மேரியன்ஸ்
பங்களாதேஷ் எதிர் நேபாளம் பி. சரா ஓவல்
9/9/2019 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் கொழும்பு கிரிக்கெட் கழகம்
பாகிஸ்தான் எதிர் குவைத் மொறட்டுவ டி ஷொய்சா
10/9/2019 இலங்கை எதிர் பங்களாதேஷ் மொறட்டுவ டி ஷொய்சா
ஐ.அ.இ (UAE) எதிர் நேபாளம் சிலாபம் மேரியன்ஸ்
12/9/2019 அரையிறுதி 1 – A 1 vs B 2 பி. சரா ஓவல்
அரையிறுதி 2 – A 2 vs B1 என்.சி.சி மைதானம்
14/9/2019 இறுதிப் போட்டி ஆர்.பிரேமதாஸ

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<