போட்டி நிர்ணயத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள்தடை விதிக்கவேண்டும்: குக்

475
Cook

போட்டி நிர்ணயத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்கள், ஆயுட்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டெயர் குக், பாகிஸ்தானின் மொஹமட் ஆமிருக்கு வழங்கப்பட்ட தண்டனையை அவர் பூரணப்படுத்தியுள்ளதால், அவரை எதிர்கொள்வதில் தனக்குப் பிரச்சினையில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இளஞ்சிவப்பு நிறப்பந்து வேண்டாம் – இரு நாட்டு தலைவர்கள்

இங்கிலாந்து அணிக்கெதிராக லோர்ட்ஸில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டமைக்காகப் பாகிஸ்தானின் சல்மான் பட், மொஹமட் ஆசிப், மொஹமட் ஆமிர் ஆகியோருக்குத் தடைகளும் சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட்ட நிலையில், அந்த மூவரில் மொஹமட் ஆமிர், இங்கிலாந்துக்கெதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த குக், “போட்டி நிர்ணயத்தில் நீங்கள் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், ஆயுளுக்கும் நீங்கள் தடை செய்யப்பட வேண்டும். விளையாட்டின் நற்பெயரைப் பாதுகாக்க வேண்டுமென்பதால், தண்டனையென்பது கடுமையாக இருக்க வேண்டும்என்றார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அதற்காக, ஆமிர் மீண்டும் வரக்கூடாது எனத் தெரிவிக்கவில்லை. ஏனெனில், அப்போது விதிகள் வேறாக இருந்தன. ஆனால், எனது கருத்து என்னவெனில், அதில் ஈடுபடுவதற்கு ஏனையோரைத் தடுக்கும் வகையில், தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். தனது தண்டனைக் காலத்தை ஆமிர் கழித்துவிட்டார். அவர் செய்தமைக்காக அவர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார், அது சரியானது. ஆனால், அவருக்கெதிராக விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதுஎன்றார்.

ஆதாரம்விஸ்டன் இலங்கை

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்