IPL தொடரிலிருந்து விலகும் ஹர்பஜன் சிங் 

112
Image Courtsey - BCCI

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

.பி.எல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக, தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் போட்டித் தொடர் நடைபெறும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் முகாமிட்டுள்ளன. கொவிட் – 19 வைரஸ் தடுப்பு விதிகளை பின்பற்றி பயிற்சிகளையும் அணிகள் தொடங்கியுள்ளன

சென்னை சுப்பர் கிங்ஸ் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்ற சென்னை அணி…

இந்த நிலையில்சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், இம்முறை .பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

சொந்த காரணங்களுக்காக .பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹர்பஜன் சிங், தனது முடிவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்

முன்னதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னை அணி இன்னும் பயிற்சியை ஆரம்பிக்கவில்லை

ஏற்கனவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துணைத் தலைவரான சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக .பி.எல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியிருந்தார்

ஹர்பஜன் சிங் சென்னை அணியுடன் டுபாய் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்த நிலையில், தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக .பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Video – சென்னை சுப்பர் கிங்ஸ் vs Suresh Raina நடந்தது என்ன?|Sports RoundUp – Epi 130

உள்ளூர் முதல்தரப் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் சம்பியனாகிய குசல் மெண்டிஸ்…

இதுஇவ்வாறிருக்க, சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் PTI செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியில்

”இன்றைய தினத்திலிருந்து (04) எமது வீரர்கள் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளார்கள். வைரஸினால் பாதிக்கப்பட்ட 13 பேர் நீக்கலாக மற்றவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாருக்கும் கொவிட் – 19 வைரஸ் இல்லை என அறிக்கை வந்துள்ளது” என தெரிவித்தார்.

இதனிடையே, இம்முறை .பி.எல் தொடரில் ஹர்பஜன் சிங் விளையாடாவிட்டாலும், சென்னை அணியில் பியூஷ்  சாவ்லா, மிட்செல் சாண்ட்னர், இம்ரான் தாஹிர் ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க