New Zealand fast bowler Jacob Duffy’s prolific 2025 with the ball has been rewarded with a selection in the Black Caps’ ICC Men’s T20 World Cup squad.
The second-ranked T20I...
அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெறும் ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட பலமான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை (NZC) அறிவித்துள்ளது.
இலங்கை T20I அணியில் மாற்றம்; அணிக்கு திரும்பும் அனுபவ வீரர்!
இந்த அணியில் முக்கிய உள்ளடக்கமாக வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்(f)பி அமைகின்றார். முதன் முறையாக உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ள ஜேக்கப், கடந்த 2025ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 81 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அனுபவம் வாய்ந்த மிச்செல் சான்ட்னர் மூலம் வழிநடாத்தப்படும் நியூசிலாந்து அணியில் இளம் வீரர்களான டிம் ரொபின்சன், பெவன் ஜேக்கப்ஸ் மற்றும் ஷேக்கரி போல்க்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜேக்கப் டப்(f)பியுடன் லொக்கி பெர்குஸன், மேட் ஹென்றி மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் உள்ளனர்.
அதேநேரம் இவர்களுடன் சகலதுறைவீரரான ஜேம்ஸ் நீஷமும் பந்துவீச்சில் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்துவீச்சினை நோக்கும் போது சான்ட்னர் உடன் இந்திய துணைக்கண்ட ஆடுகளங்களை கருத்திற் கொண்டு சான்ட்னருடன், இஷ் சோதி இணைந்துள்ளார்.
துடுப்பாட்டத்தை கருத்திற் கொள்ளும் போது அதிரடிவீரர் பின் அலனுடன் விக்கெட்காப்பு வீரர் டிம் செய்பார்ட் களமிறங்குகிறார். இவர்களுடன் டெவோன் கொன்வே, மார்க் சப்மேன், கிளன் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் முன்னணி வீரர்களாக பலப்படுத்துகின்றனர்.
அதேவேளை அணியின் மேலதிக வீரர்களில் ஒருவராக வேகப்பந்துவீச்சாளரான கைல் ஜேமிசன் உள்வாங்கப்பட்டுள்ளார்.
T20 உலகக் கிண்ணம் குறித்துப் கருத்து வெளியிட்ட நியூசிலாந்தின் தலைமை பயிற்சியாளர் ரோப் வோல்டர், கிரிக்கெட்டின் இதயமாகக் கருதப்படும் இந்தியாவில் விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், துணைக் கண்ட சூழலுக்கு ஏற்பத் திறமையான வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நியூசிலாந்து T20 உலகக் கிண்ணத் தொடரிற்காக குழு D இல் நிரல்படுத்தப்பட்டுள்ளதோடு, தனது முதல் போட்டியில் பிப்ரவரி 8ஆம் திகதி சென்னையில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.
நியூசிலாந்து குழாம்:
மிச்செல் சான்ட்னர் (கேப்டன்), பின் அலன், மைக்கல் பிரஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கொன்வே, ஜேக்கப் டப்(f)பி, லொக்கி பெர்குஸன், மேட் ஹென்றி, டேரைல் மிச்செல், அடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செய்பார்ட், இஷ் சோதி.
மேலதிக வீரர்: கைல் ஜேமிசன்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<