பாகிஸ்தான் முன்னாள் வீரர் தௌபீக்கிற்கு கொரோனா தொற்று

62
TAUFEEQ UMAR

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கனிஷ்ட தேர்வுக் குழுவின் உறுப்பினருமான தௌபீக் உமருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தௌபீக் உமர் ஒரு முக்கிய இடத்தை வகித்தார், அவர் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்

>>தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு<<

மேலும் 2006 – 2010 க்கு இடையில் அவர் அணியில் விளையாட வில்லை என்றாலும், 2001 ஆம் ஆண்டில் அவர் முக்கிய வீரராக திகழ்ந்தவர்

அந்த அணிக்காக 22 ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாடியுள்ள 38 வயதான உமர் தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியை 2014 ஆம் ஆண்டு விளையாடியிருந்தார். பின்பு அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றார்

இந்நிலையில் இடதுகை ஆட்டக்காரரான தௌபீக் உமருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நேற்றுமுன்தினம் இரவு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் கொரோனா பரிசோதனை செய்த நிலையில் எனக்கு தொற்று இருப்பது தெரிய வைத்துள்ளது.

எனக்கு கடுமையான அறிகுறிகள் இல்லை. எனவே நான் என்னை வீட்டில் தனிமை படுத்தி உள்ளேன். நான் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

>>கொரோனா வைரஸினால் உயிரிழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்<<

மஜீத் ஹக் (ஸ்கொட்லாந்து), ஜாபர் சர்பராஸ் (பாகிஸ்தான்) மற்றும் சோலோ நிக்வேனி (தென்னாப்பிரிக்கா) ஆகியோருக்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 4ஆவது கிரிக்கெட் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தானில் இதுவரை 54,601 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளனர். அவர்களில் 17,198 பேர் குணமடைந்துள்ளனர். 1,100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<