தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு

31
 

தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரான சோலோ நிக்வேனிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   

அவர் கடந்த ஓராண்டாக பல்வேறு மோசமான உடல்நிலை பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ள நிலையில், தற்போது கொரோனா பாதிப்புக்கும் உள்ளாகி இருக்கிறார்.  

கொரோனா வைரஸினால் உயிரிழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட …

ஏற்கனவே கணையம், சிறுநீரகம் செயலிழந்துள்ள நிலையில், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக சோலோ நிக்வேனி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  

முன்னதாக, ஸ்கொட்லாந்து வீரர் மஜித் ஹக் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சபர் சர்ப்ராஸ் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதில் மஜித் ஹக் கொரோனாவில் இருந்து குணமடைந்ததுடன், சபர் சர்ப்ராஸ் உயிரிழந்தார்.  

இந்த நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்றாவது கிரிக்கெட் வீரராக 25 வயதான சோலோ நிக்வேனி பதிவாகியுள்ளார். இவர் தற்போது ஸ்கொட்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.   

26 வயதான நிக்வேனி சோலோ, 2012ல் தென்னாபிரிக்காவின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடியுள்ளார். தென்னாபிரிக்காவின் உள்ளூர் போட்டிகளில் ஈஸ்டர்ன் ப்ரவின்ஸ் அணிக்காக விளையாடிய சோலோ, அந்நாட்டின் டி20 லீக் கிரிக்கெட்டில் வாரியஸ் அணிக்காகவும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சகலதுறை வீரரான நிக்வேனி சோலோ இறுதியாக கடந்த 2019 ஏப்ரல் மாதம் ஈஸ்டர்ன் ப்ரவின்ஸ் அணிக்காக விளையாடியதுடன், 95 ஓட்டங்களைக் குவித்தார்.

அதன் பின் கடந்த வருடம் ஜூலை மாதம் அவருக்கு கில்லன் பார் சின்ட்ரோம் என்ற மோசமான நோய் தாக்கியது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, நரம்புகளை தாக்கும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் உடல் வலுவிழந்து, நடுக்கம் ஏற்படும். மேலும், பல உடல் பாதிப்புகள் தொடர்ந்து ஏற்படும்

அப்போது அவரை குணப்படுத்த செயற்கையான முறையில் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது அவர் நான்கு வார கோமாவில் இருந்தார். பின்னர் அவரது நுரையீரல் இயந்திரம் மூலம் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கணையம் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்தன

எனினும், உரிய சிகிச்சைகளுக்குப் பிறகு அவரது நிலையில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டதுடன், கடந்தக்டோபர் மாதம் அளவில் அவரால் பேச முடிந்தது.

டிபாலாவின் உடலை விட்டு நீங்காத கொரோனா வைரஸ் தொற்று

ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாவுக்கு கடந்த ஆறு…

இந்த நிலையில், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அவருக்கு தென்னாபிரிக்காவுக்குத் திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் போக்குவரத்துச் செலவு அவரது குடும்பத்தினருக்கு மிகையாக இருந்தது

இதன்காரணமாக அவருக்கு நிதிதிரட்டுவதற்கு GoFundMe என்ற பெயரில் பிரச்சாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனால் அவருக்கு தனிப்பட்ட நிதி வழங்குனர் ஒருவரால் 76,875 ஸ்ரேலிங் பவுண்ட்கள் நிதி உதவி வழங்கப்பட்டது.

இதனையடுத்து சோலோ நிக்வேனி கடந்த ஜனவரி மாதம் ஜொஹனஸ்பேர்க்குக்குச் திரும்பியதுடன், அங்கு அவர் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுஇவ்வாறிருக்க, கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி அவருடைய மருத்துவ செலவுகளுக்கு 50,000 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக அளித்தது.

எனவே, பல்வேறு நோய்களினால் போராடி வரும் சோலோ நிக்வேனிக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அவர் இப்போது பேசும் நிலையில் இருப்பதாக அவரின் முகாமையாளர் ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார்

இதனிடையே, சோலோ நிக்வேனி தன் நிலையை எண்ணி வேதனையுடன் டுவிட்டரில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

Solo Nicholas Nqweni on Twitter

So last year I got GBS, and have been battling this disease for the past 10 months…

”ஜி.பி.எஸ் என்கிற அரியவகை நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டேன். 10 மாதங்களாக இந்த நோயை விரட்டப் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதிதான் மீண்டு வந்திருக்கிறேன். காசநோயும் வந்தது. கல்லீரலும் சிறுநீரகமும் பழுதடைந்துள்ளன

தற்போது, கொரோனா வைரஸாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏன் எல்லாமே நடக்கிறது என நிஜமாகவே தெரியவில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…