ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி 2021 வரை ஒத்திவைப்பு

77

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த யூரோ என்றழைக்கப்படுகின்ற ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

கால்பந்து விளையாட்டில் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்து மிகப்பெரிய போட்டியாக ஐரோப்பிய சம்பியன்ஷிப் (யூரோ) தொடர் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது

இறுதியாக இந்தப் போட்டித் தொடர் 2016இல் பிரான்சில் நடைபெற்றதுடன், இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி சம்பியனாகத் தெரிவாகியது.

இந்த நிலையில், 24 அணிகள் இடையிலான 16ஆவது யூரோ கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியை எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 11ஆம் திகதி வரை இங்கிலாந்து, ஜேர்மனி, ஷ்யா, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட 12 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டது

கொரோனா வைரஸினால் ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் கழக கால்பந்து…..

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸின் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினில் தான் இதன் அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுகிறது.

எனவே இம்முறை யூரோ கால்பந்தாட்டத் தொடர் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று சந்தேகம் நிலவியது

இந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அலெக்சாண்டர் செப்ரின் தலைமையில் சுவிட்சர்லாந்தில் நேற்று (17) நடைபெற்றது

இதில் யூரோவில் அங்கம் வகிக்கின்ற 55 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக, வீரர்களின் சங்க நிர்வாகிகள் வீடியோ உரையாடல் மூலம் தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனர்

இறுதியில் யூரோ கால்பந்து போட்டித் தொடரை அடுத்த ஆண்டுக்கு (2021) ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது

இதன்படி, 2021ஆம் ஆண்டு இதே ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 11ஆம் திகதி வரை நடத்துவது என்றும், போட்டி நடைபெறும் நகரங்களில் மாற்றமில்லை, அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது

இதுதொடர்பில் யூரோ கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் அலெக்சாண்டர் செபிரின் கருத்து வெளியிடுகையில்

“கொரோனாோ வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் இந்தப் போட்டித் தொடரை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக, வீரர்கள் மற்றும் இரசிகர்களின் உடல்நலத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம்” என தெரிவித்தார்

இந்த போட்டித் தொடருக்கு இதுவரை நடப்பு சம்பியன் போர்த்துக்கல், முன்னாள் சம்பியன்கள் ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, உலக சம்பியன் பிரான்ஸ், குரேஷிப் யா, ஷ்யா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட 20 அணிகள் தகுதி பெற்றுள்ளன

சிறையிலும் கால்பந்து தொடரை வென்ற ரொனால்டினோ

பரகுவே சிறையில் இருக்கும் பிரேசில் முன்னாள் கால்பந்து……

எஞ்சிய 4 அணிகள் எவை என்பதை உறுதி செய்ய பிளேஒப் சுற்று இந்த மாதத்தில் நடைபெற இருந்தது. அது ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு விட்டதால் பிளேஒப் சுற்று போட்டிக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, தென்அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் கலந்துகொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்தாட்டத் தொடர் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி அர்ஜென்டினா மற்றும் கொலம்பியாவில் நடைபெற இருந்தது

எனினும், கொரோனா பீதியால் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இதன்படி, 2021ஆம் ஆண்டில் யூரோ கால்பந்தாட்டப் போட்டி நடக்கும் அதே காலக்கட்டத்தில் இந்த போட்டித் தொடரும் நடைபெறும் என்று தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது

இந்த நிலையில், கொரோனா வைரஸால், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நடைபெறுகின்ற லீக் கால்பந்து போட்டிகள் முழுவதும் நிலைகுலைந்து போயின.  

ஆர்சனல் பயிற்சியாளருக்கு வைரஸ் தொற்று: ப்ரீமியர் லீக்கில் சலசலப்பு

ஆர்சனல் கால்பந்து கழக அணியின் தலைமை பயிற்சியாளர் மைக்கல்…..

அத்துடன், சம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பா லீக் கால்பந்தாட்டப் போட்டிகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், ஐரோப்பாவின் பிரபல கால்பந்து அணிகளில் ஒன்றான ஸ்பெய்னின் வலேன்சியா கழகத்தைச் சேர்ந்தவர்களில் 35 சதவீதமானோர் கெரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் உள்ள வீரர்கள் கடந்த மாதம் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் தாக்கத்தைப் எதிர்த்துப் போராடும் முயற்சியில் பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு (சிபிஎப்) அந்த நாட்டில் நடைபெறுகின்ற அனைத்து தேசிய கால்பந்து போட்டிகளையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<