ஆர்சனல் பயிற்சியாளருக்கு வைரஸ் தொற்று: ப்ரீமியர் லீக்கில் சலசலப்பு

ஆர்சனல் கால்பந்து கழக அணியின் தலைமை பயிற்சியாளர் மைக்கல் ஆர்டெட்டாவுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அந்தக் கழகத்தின் லண்டன் கொலனியில் உள்ள பயிற்சி மையம் மூடப்பட்டுள்ளது.  

அந்த அணி நாளை (14) பங்கேற்கவிருந்த  பிரைட்டன் அணிக்கு எதிரான ப்ரீமியர் லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

சம்பியன்ஸ் லீக்கில் நடப்புச் சம்பியன் லிவர்பூல் வெளியேற்றம்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 ….

இந்நிலையில் எதிர்கால போட்டி அட்டவணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ப்ரீமியர் லீக் இன்று (13) அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.  

இது பெரும் ஏமாற்றத்தை தருகிறதுஎன்று ஸ்பெயின் நாட்டவரான 37 வயது ஆர்டெட்டா குறிப்பிட்டார்

உடல்நிலை மோசமாக இருப்பதை உணர்ந்ததால் நான் மருத்துவ சோதனை செய்துகொண்டேன். எனக்கு அனுமதி கிடைத்தவுடன் நான் பணிக்குத் திரும்புவேன்என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் ஆர்சனல் தனது முழுமையான முதல்நிலை அணியினர் மற்றும் பயிற்சி ஊழியர்கள் உட்பட ஆர்டெட்டாவுடன் அண்மைக்காலத்தில் நெருக்கமாக இருந்த கழகத்தின் கணிசமானவர்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறது. அதேபோன்று மூடப்பட்டிருக்கும் ஆர்சனல் பயிற்சி மையம் மற்றும் அகடமி இரண்டும் முழுமையாக சுத்தம் செய்யப்படவிருப்பதாக அந்தக் கழகம் விடுத்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

ஆர்சனல் அணி ப்ரீமியர் லீக்கில் சனிக்கிழமை அமெக்ஸ் அரங்கில் பிரைட்ட அணியை எதிர்கொள்ளவிருந்தது. ஆனால் ஆர்டெட்டாவுக்கு கொரோனா வைரஸ் தோற்று இருப்பது உறுதியான சற்று நேரத்திலேயே அந்தப் போட்டி நிறுத்தப்படும் அறிவிப்பை பிரைட்டன் கழகம் வெளியிட்டது.  

இந்நிலையில் இந்த நெருக்கடி தொடர்பில் 20 ப்ரீமியர் லீக் கழகங்களும் ஒருமித்த நிலைப்பாடு ஒன்றுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது. இன்றைய சந்திப்பில் இந்த வாரத்தில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் ஒத்திவைக்கும் தீர்மானம் ஒன்றுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

எம்முடையவர்கள் மற்றும் பரந்த பொதுமக்களின் சுகாதாரத்திற்கே நாம் முன்னுரிமை அளிக்கிறோம் என்பதோடு அது பற்றியே அவதானம் செலுத்தியுள்ளோம்என்று ஆர்சனல் முகாமைத்துவப் பணிப்பாளர் வினாய் வெங்கடேசம் குறிப்பிட்டார்.   

இந்த நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு தொடர்புபட்ட அனைவருடனும் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். மருத்துவ ஆலோசனை அனுமதி தந்த விரைவில் பயிற்சி மற்றும் ஆட்டங்களுக்கு திரும்புவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்என்றும் அவர் குறிப்பிட்டார்.  

கிரேக்க கால்பந்து கழகமான ஒலிம்பியாகோஸ் உரிமையாளர் எவஞ்சலோஸ் மரினாகிசுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானதை அடுத்து கடந்த புதன்கிழமை நடைபெறவிருந்து மன்செஸ்டர் சிட்டியுடனான ப்ரீமியர் லீக் போட்டியை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்சனல் ஒத்திவைத்ததோடு பல ஆர்சனல் வீரர்களும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொண்டனர்.   

கொரோனா பீதி: ஆசிய பதினொருவர் – உலக பதினொருவர் போட்டி ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ….

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒலிம்பியாகோஸ் அணிக்கு எதிராக ஐரோப்பிய லீக் போட்டியில் ஆடியபோது மரினாகிஸை எமது பல வீரர்களும் சந்தித்ததாக ஆர்சனல் கழகம் குறிப்பிட்டுள்ளது

மறுபுறம் மன்செஸ்டர் சிட்டி பின்கள வீரர் பென்ஜமின் மென்டியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரசுக்கான நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்

கொரோனா வைரசுக்கான நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து லெய்செஸ்டர் அணியின் மூன்று வீரர்களும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்

அதேபோன்று வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த மன்செஸ்டர் சிட்டி மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றுப் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இத்தாலி சம்பியன்களான ஜுவன்டஸ்் கழகத்தின் பின்கள வீரர் டகிலே ருகானிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அந்த அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<