பொதுநலவாய விளையாட்டில் தேசிய கொடியை ஏந்தும் பளுதூக்கல் வீரர்!

180

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் தொடக்க விழாவின் போது இலங்கை சார்பில் முன்னணி பளுதூக்கல் வீரரான சிந்தன கீதால் விதானகே தேசிய கொடியை ஏந்திச்ளு செல்லவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

13 வகையான போட்டிகளுக்காக இலங்கை சார்பில் 80 வீரர்களும், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட 40 அதிகாரிகள் உள்ளடங்கலாக சுமார் 150 பேர் இம்முறை போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

இதன்படி, இம்முறை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் விளையாட்டுக்காக அதிக வீரர்கள்(13 பேர்) கலந்துகொள்ளவுள்ளதுடன், பளுதூக்கல்(11 பேர்), மல்யுத்தம்(3 பேர்), குத்துச்சண்டை(6 பேர்), நீச்சல்(6 பேர்), மேசைப்பந்து(6 பேர்), எழுவர் ரக்பி(12 பேர்), கடற்கரை கரப்பந்தாட்டம்(2 பேர்), துப்பாக்கி சுடுதல்(3 பேர்), ஜிம்னாஸ்டிக்(5 பேர்), பெட்மிண்டன்(8 பேர்), ஸ்குவாஷ்(2 பேர்) மற்றும் சைக்கிளோட்டம்(2 பேர்) ஆகிய போட்டிகளுக்காக வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான திகதி அறிவிப்பு

3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

இதேவேளை, இலங்கை பளுதூக்கல் அணியின் அனுபவமிக்க வீரரும், பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றவருமான சின்தன கீதால் விதானகே, இம்முறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் இலங்கை அணியின் அணிவகுப்புக்கு தலைமை தாங்குகிறார்.  

5ஆவது தடவையாகவும் இவ்விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள சிந்தன கீதால் விதானகே, முன்னதாக 2002, 2006, 2010 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக போட்டியிட்டிருந்தார்.  

இதில் 2006 மெல்பேர்னில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் 62 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், 2010இல் இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் 69 கிலோ கிராம் எடைப்பிரிவில் 308 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.

எனினும், இறுதியாக 2014இல் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் அவர் துரதிஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவியிருந்தமை நினைவுகூறத்தக்கது.

இந்நிலையில், குறித்த விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டிகளுக்காக 11 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் 7 வீரர்களும், 4 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களுள் 6 வீரர்கள் முதற்தடவையாக குறித்த விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரிதி வட்டம் எறிதலில் எம்மாவின் மற்றுமொரு மைல்கல்

அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையின் பரிதி வட்டம்..

இம்முறை விளையாட்டு விழாவில் இலங்கைக்கு பதக்கங்களை வெல்ல முடியும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள போட்டிகளில் பளுதூக்கல் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதிலும் இறுதியாக நடைபெற்ற 3 விளையாட்டு விழாக்களிலும் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை இலங்கை பளுதூக்கல் அணி வென்றுள்ளது.

இந்நிலையில், இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சிந்தன கீதால் கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தேசிய கொடியை ஏந்திச் செல்லவதற்காக என்னை தெரிவு செய்தமைக்கு தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் தொடர்ச்சியாக 4 தடவைகள் பங்கேற்ற ஒரேயொரு அனுபவமிக்க வீரராக இம்முறை எமது அணியை வழிநடத்தவுள்ளேன். எமது பளுதூக்கல் அணி, இம்முறை 4 பதக்கங்களையாவது வெற்றி கொள்ள எதிபார்த்துள்ளது. எனினும், போட்டியின் போது திடமான மன உறுதியுடன் விளையாடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்” என்றார்.

இதேநேரம், பொதுநலவாய போட்டிகளுக்கான இலங்கை அணியின் பிரதானியாக தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் முன்னாள் பொருளாளர் காமினி ஜயசிங்க செயற்படவுள்ளதுடன், முகாமையாளராக இலங்கை ஹொக்கி சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சுமித எதிரிசிங்கவும் செயற்படவுள்ளனர்.

இந்நிலையில் பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரம் எஞ்சியுள்ள நிலையில் குறித்த போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை நீச்சல் மற்றும் மெய்வல்லுனர் அணிகளில் அங்கம் வகிப்போம் மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ளனர். அத்துடன், இலங்கை பளுதூக்கல் அணி எதிர்வரும் 28ஆம் திகதி கோல்ட் கோஸ்ட் பயணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விளையாட்டு மருத்துவம் ஏன் முக்கியத்துவமாகின்றது?

விஞ்ஞானம் உலகுக்கு தந்த கொடைகளில் ஒன்றே…

அத்துடன் ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இவ்விளையாட்டு விழாவின் 21ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளதுடன், இதில் பங்கேற்கவுள்ள எஞ்சிய இலங்கை அணி இந்த வார இறுதியில் அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மெய்வல்லுனர் குழாம்

ஆண்கள்

மஞ்சுள குமார புஷ்பகுமார (உயரம் பாய்தல்), பிரசாத் விமலசிறி (நீளம் பாய்தல்), சம்பத் ரணசிங்க (ஈட்டி எறிதல்), வினோஜ் சுரஞ்சய டி சில்வா, ஹிமாஷ ஏஷான், செஹான் அம்பேபிட்டிய, அஷ்ரப் லதீப், சுமேஷ் விக்ரமசிங்க (4x100 அஞ்சலோட்டம்)

பெண்கள்

ஹிருனி விஜேரத்ன (மரதன்), நிமாலி லியனாரச்சி (800 மீற்றர்), கயன்திகா அபேரத்ன (800 மீற்றர்), ருமேஷிகா ரத்னாயக்க(200 மீற்றர்), நதீஷா தில்ஹானி லேகம்கே (ஈட்டி எறிதல்)

முகாமையாளர்நிமலசிறி ஹேவா விதானகே

பயிற்விப்பாளர்கள்சுனில் குணவர்தன(அஞ்சலோட்ட அணியின் ஒருங்கிணைப்பாளர்), மிரன்டா ரமிரஸ் லுயில் (மத்திய தூர ஓட்டம்), சஜித் ஜயலால்(பாய்தல்), கிங்ஸ்லி குணதிலக்க(எறிதல்)

இலங்கை மெய்வல்லுனர் குழாம்

ஆண்கள்

சிரன்த டி சில்வா(50 மற்றும் 100 சதாரண நீச்சல் 50, 100, 200 பட்டர்ப்ளை நீச்சல்), மெத்யூ அபேசிங்க(50,100,200 சாதாரண நீச்சல்), அகலங்க பீரிஸ்(50,100,200 பின்நோக்கிய நீச்சல் மற்றும் 50 பட்டர்ப்ளை நீச்சல்), கைல் அபேசிங்க(50,100 சாதாரண நீச்சல்)

பெண்கள்

வினோலி களுஆரச்சி(50,100 பின்நோக்கிய நீச்சல் மற்றும் 50,100 சாதாரண நீச்சல்), தில்ருக்ஷி அவன்தி தெவ்மினி பெரேரா(50 சாதாரண நீச்சல் மற்றும் 50 பட்டர்ப்ளை நீச்சல்)

டைவிங்

லக்ஷானி டி சில்வா( 1 மற்றும் 3 ஸ்பிரிங் போர்ட்), தேஜனா பீரிஸ்(1, 3 மற்றும் 10 ஸ்பிரிங் போர்ட்)  

முகாமையாளர்சானக ஹசன்த

பயிற்றுவிப்பாளர்ஜுலியன் போலிங் மற்றும் புத்தி அபேசிங்க(நீச்சல்), சானக துமிந்த(டைவிங்)

இலங்கை பெட்மின்டன் குழாம்

ஆண்கள்

புவனேகா துல்லேவ(ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு பெட்மின்டன்), தினுக கருணாரத்ன(ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு பெட்மின்டன்), நிலூக கருணாரத்ன(ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு பெட்மின்டன்), சச்சின் டயஸ் (ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு பெட்மின்டன்)

பெண்கள்

திலினி ஹெந்தஹேவா((ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு பெட்மின்டன்), கவிதி சிறிமான்னகே(ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு பெட்மின்டன்), ஹிசினி அம்பலங்கொடகே(ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு பெட்மின்டன்), மதுஷிகா தில்ருக்ஷி(ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு பெட்மின்டன்)

முகாமையாளர் – துமிந்த கமகே மற்றும் நிஷாந்த அலுத்கே
பயிற்றுவிப்பாளர் – தனேஷ் மல்லியவது, டொனி வஹுடி

இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட குழாம்

அசங்க பிரதீப் குமார மற்றும் மலின்த யாப்பா
பயிற்றுவிப்பாளர் – மஹேஷ் பெரேரா

இலங்கை குத்துச்சண்டை குழாம்

ஆண்கள்

ரன்ஜீவ செனவிரத்ன பண்டார(52 கிலோ எடைப்பிரிவு), சந்தருவன் ரணசிங்க(49 கிலோ எடைப்பிரிவு), துஷான் சப்ரமது(64 கிலோ எடைப்பிரிவு)

பெண்கள்

அனூஷா தில்ருக்ஷp(48 கிலோ எடைப்பிரிவு), துலானி ஜயசிங்க(51 கிலோ எடைப்பிரிவு) ஹன்சிகா கஸ்தூரி ஆரச்சி(57 கிலோ எடைப்பிரிவு)

முகாமையாளர் – க்ளேமட் ரணசிங்க
பயிற்றுவிப்பாளர் – உபாலி ரத்னாயக்க

இலங்கை ஜிம்னாஸ்டிக் குழாம்

சமன்மலி குணதிலக, அமாயா கலுகோட்டகே, கௌஷானி குணசிங்க கமகே, என்னா மெரி ஒன்டாச்சி

பயிற்றுவிப்பாளர்தரங்க வெலந்தகே, ஸ்வெட்லானா ஜவுகோவா

இலங்கை எழுவர் றக்பி குழாம்

சுதர்ஷன் முதுதந்திரி(தலைவர்), தனுஷ்க யான், ரெஹான் சில்வா, ஒமல்க குணரத்ன, ஜேசன் திஸாநாயக்க, ஸ்ரீநாத் சூரியபண்டார, தரிந்த ரத்வத்த, கவிந்து பெரேரா, அனுருத்த வில்வர, ரிச்சர்ட் தர்மபால, தனுஷ்க ரன்ஞன் மற்றும் நவீன் ஹேனகன்கானம்கே

பதில் வீரர்கள்ஹிரந்த பெரேரா, துவான் ரீசா, பரிந்த சூரியாரச்சி, ருஷ்ன பிரியன்த

உயர் செயற்திறன் பணிப்பாளர்இன்திஷாம் மரிக்கார்

பயிற்றுவிப்பாளர்பீட்டர் வூட்

இலங்கை துப்பாக்கி சுடுதல் குழாம்

ஆண்கள்

சுரங்க பெர்னாண்டோ(10 எயார் ரைபல் பிஸ்டல் மற்றும் 50 பிஸ்டல்), உபுல் குமார விஜேரத்ன(50 பிஸ்டல்)

பெண்கள்

சந்துனி பெரேரா(10 எயார் ரைபல்)

முகாமையாளர்சின்தக எதிரிசிங்க

இலங்கை ஸ்குவாஷ் குழாம்

ரவிந்து லக்சிறி(ஆண்), மிஹிலியா மெத்சரனி(பெண்)

கொழும்பு கால்பந்துக் கழகத்தில் இணையும் ஷரித்த

குருநாகல் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகத்தின்..

இலங்கை மேசைப்பந்து குழாம்

ஆண்கள்

உதய ரணசிங்க, ரொஹான் சிறிசேன, நிர்மல பண்டார ஜயசிங்க(குழு நிலை போட்டி)

பெண்கள்

மதுரங்கி தர்ஷிகா, ஹன்சனி கபுகீகின்ன, எரந்தி வருசாவிதான

இலங்கை பளுதூக்கல் குழாம்

ஆண்கள்

ஜே. சதுரங்க லக்மால் (56 கிலோ எடைப்பிரிவு), திலங்க பலகசிங்க (62 கிலோ எடைப்பிரிவு), இந்திக சதுரங்க திசாநாயக்க (69 கிலோ எடைப்பிரிவு), சின்தன கீதால் விதானகே (77 கிலோ எடைப்பிரிவு), சானக மதுஷங்க பீடர்ஸ் (94 கிலோ எடைப்பிரிவு), .ஜி சமன் அபேவிக்ரம (105 கிலோ எடைப்பிரிவு), டபிள்யு. பி.உஷான் சாருக (105 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவு),

பெண்கள்

ஹங்சனி தோமஸ் (48 கிலோ எடைப்பிரிவு), சமரி வர்ணகுலசூரிய (53 கிலோ எடைப்பிரிவு), நதீஷானி ராஜபக்ஷ (58 கிலோ எடைப்பிரிவு), பி. சதுரிகா பிரியந்தி (75 கிலோ எடைப்பிரிவு)

முகாமையாளர் – தமேல் வர்ணகுலசூரிய
பயிற்றுவிப்பாளர் – ஆர்.எம்.ஆர்.பி விக்ரமசிங்க

இலங்கை மல்யுத்த குழாம்

ஆண்கள்

டிவோஷன் பெர்னாண்டோ(57 கிலோ எடைப்பிரிவு), சானக பெர்னாண்டோ(74 கிலோ எடைப்பிரிவு)

பெண்கள்

தில்ஹானி வீரபாஹு(53 கிலோ எடைப்பிரிவு)

முகாமையாளர் – பிரகீத் பிரியங்கர
பயிற்றுவிப்பாளர் – ஜகத் பிரியன்த