Home Tamil அபார வெற்றியுடன் புள்ளிப்பட்டியின் முதலிடத்தில் தம்புள்ள ஓரா

அபார வெற்றியுடன் புள்ளிப்பட்டியின் முதலிடத்தில் தம்புள்ள ஓரா

Lanka Premier League 2023

107

கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான LPL தொடரின் 16வது போட்டியில் அலெக்ஸ் ரொஸ் மற்றும் பென் மெக்டோமர்ட் ஆகியோரின் அபாரமான துடுப்பாட்ட பிரகாசிப்புகளின் உதவியுடன் தம்புள்ள ஓரா அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஓரா அணி நாணய முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய முதல் போட்டியில் பி லவ் கண்டி அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து தம்புள்ள ஓரா அணி பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தது. எனினும் கட்டாய வெற்றியை நோக்கி கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி களமிறங்கியிருந்தது.

அவிஷ்கவின் அதிரடியில் தம்புள்ளை ஓரா அணி வெற்றி

கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பத்தை பந்துவீச்சாளர்கள் பெற்றுக்கொடுத்தனர். அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தம்புள்ள அணி நான்காவது விக்கெட்டாக தனன்ஜய டி சில்வாவையும் இழந்தது. எனவே 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் இழக்கப்பட்டன.

முன்னணி வீரர்களின் ஆட்டமிழப்புக்கு பின்னர் தடுமாறிய தம்புள்ள ஓரா அணிக்கு அவுஸ்திரேலிய வீரர்களான அலெக்ஸ் ரொஸ் மற்றும் பென் மெக்டேமர்ட் ஆகியோர் அற்புதமான இணைப்பாட்டத்தை வழங்கி புத்துயிர் கொடுத்தனர்.

இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிய போதும், இன்னிங்ஸின் பிற்பகுதியில் 100 மீற்றர் சிக்ஸர்களை விளாசியதுடன் அரைச்சதத்தை கடந்தனர். இருவரும் 71 பந்துகளில் 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில், அலெக்ஸ் ரொஸ் 52 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் பென் மெக்டெமோர்ட் கடைசி ஓவர்வரை களத்தில் நின்று அதிரடியாக ஆடியதுடன் 46 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை 166/5 ஆக உயர்த்தினார். பந்துவீச்சில் மதீஷ பதிரண 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி வேகமாக ஓட்டங்களை குவிக்கத்தொடங்கிய போதும், தொடர்ச்சியாக விக்கெட்டுகளையும் பறிகொடுக்க தொடங்கியிருந்தது.

குறிப்பாக நிரோஷன் டிக்வெல்ல 6 பந்துகளில் 17 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக்கிய போதும், பெதும் நிஸ்ஸங்க, பாபர் அஷாம் மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து நுவனிது பெர்னாண்டோ நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்திருக்க, அவரும் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனவே 74 ஓட்டங்களுக்கு கொழும்பு அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து மொஹமட் நவாஸ் (20) மற்றும் இப்திகார் அஹமட் (18) ஆகியோர் அணியை மீட்க போராடிய போதும், தம்புள்ள ஓரா அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான துஷான் ஹேமந்த மற்றும் நூர் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை தங்களுடைய பக்கத்துக்கு திருப்பினர்.

எனவே கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதுடன், 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதேநேரம் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஓரா அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Result


Dambulla Aura
166/5 (20)

Colombo Strikers
116/10 (19.4)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Chamika Karunaratne b Naseem Shah 7 9 1 0 77.78
Kusal Mendis b Chamika Karunaratne 7 10 1 0 70.00
Sadeera Samarawickrama c Nuwanidu Fernando b Matheesha Pathirana 1 3 0 0 33.33
Ben McDermott not out 69 46 4 4 150.00
Dhananjaya de Silva c Iftikhar Ahmed b Jeffrey Vandersay  11 9 2 0 122.22
Alex Ross c Niroshan Dickwella b Matheesha Pathirana 52 38 5 2 136.84
Hasan Ali not out 6 5 1 0 120.00


Extras 13 (b 1 , lb 2 , nb 0, w 10, pen 0)
Total 166/5 (20 Overs, RR: 8.3)
Bowling O M R W Econ
Naseem Shah 4 0 38 1 9.50
Chamika Karunaratne 4 0 35 1 8.75
Matheesha Pathirana 4 0 36 2 9.00
Mohammad Nawaz 4 0 33 0 8.25
Jeffrey Vandersay  4 0 21 1 5.25


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Dhananjaya de Silva b Binura Fernando 12 8 1 0 150.00
Babar Azam c Sadeera Samarawickrama b Hasan Ali 11 13 1 0 84.62
Niroshan Dickwella b Janith Liyanage 17 6 2 1 283.33
Nuwanidu Fernando c & b Dushan Hemantha 21 20 3 0 105.00
Angelo Perera lbw b Noor Ahmad  1 2 0 0 50.00
Iftikhar Ahmed b Dushan Hemantha 18 26 0 0 69.23
Mohammad Nawaz b Noor Ahmad  20 24 2 0 83.33
Chamika Karunaratne c Kusal Mendis b Binura Fernando 5 10 0 0 50.00
Naseem Shah c Avishka Fernando b Hasan Ali 1 5 0 0 20.00
Matheesha Pathirana c Noor Ahmad  b Hasan Ali 0 0 0 0 0.00
Jeffrey Vandersay  not out 0 0 0 0 0.00


Extras 10 (b 0 , lb 2 , nb 0, w 8, pen 0)
Total 116/10 (19.4 Overs, RR: 5.9)
Bowling O M R W Econ
Binura Fernando 3.4 0 18 2 5.29
Hasan Ali 4 0 16 3 4.00
Janith Liyanage 2 0 26 1 13.00
Dhananjaya de Silva 2 0 24 0 12.00
Noor Ahmad  4 0 14 2 3.50
Dushan Hemantha 4 0 16 2 4.00



>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<