2021ஆம் ஆண்டின் ThePapare பிரபல கால்பந்து வீரர்

ThePapare Most Popular Football Player of the Year

221
ThePapare Most Popular Football Player-of-the-Year-2021
 

இலங்கையின் விளையாட்டை ஊக்குவிக்கும் மற்றொரு முயற்சியாக, இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com, 2021ஆம் ஆண்டின் ThePapare பிரபல கால்பந்து வீரரை (ThePapare Most Popular Football Player of the Year 2021) தெரிவு செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் சுபர் லீக், சுபர் லீக் முன் பருவப் போட்டிகளில் ஆடிய 17 கழகங்களைச் சேர்ந்த வீரர்கள், இலங்கை தேசிய அணி மற்றும் 23 வயதின்கீழ் தேசிய அணி என்பவற்றை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் என மொத்தம் 81 வீரர்கள் இந்த பிரபல வீரரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட 81 வீரர்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளில் ஒன்றையாவது குறைந்தது கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  • தேசிய கால்பந்து குழாத்தில் இடம்பெற்ற வீரர்
  • 23 வயதின்கீழ் தேசிய கால்பந்து குழாத்தில் இடம்பெற்ற வீரர்
  • சுபர் லீக் அல்லது சுபர் லீக் முன் பருவத்தில் குறைந்தது ஒரு கோல் பெற்றிருத்தல்
  • சுபர் லீக் அல்லது சுபர் லீக் முன் பருவத்தில் குறைந்தது கோலுக்கான ஒரு உதவியை (Assist) வழங்கியிருத்தல்
  • சுபர் லீக் அல்லது சுபர் லீக் முன் பருவத்தில் குறைந்தது ஒரு கிளீன் சீட்டையாவது (Clean Sheet) பதிவு செய்திருத்தல்

பிரபல கால்பந்து வீரரினை தெரிவு செய்வதற்கான முதல் சுற்று இணையவழி வாக்களிப்பாக (Web Vote) இருக்கும். 2022 ஜனவரி மாதம் 21ஆம் திகதி பகல் 12 மணி முதல் 2022 ஜனவரி மாதம் 26ஆம் திகதி பகல் 12 மணி வரை இணையவழி வாக்களிப்பு இடம்பெறும். 5 நாட்களுக்கு இடம்பெறும் இணையவழி வாக்களிப்பின் முடிவில் அதிக வாக்குகளைப் பெறும் முதல் 20 வீரர்கள் குறும்தகவல் முறையிலான வாக்களிப்பிற்கு (SMS Vote) தெரிவு செய்யப்படுவர்.

இரண்டாவது மற்றும் இறுதி சுற்று வாக்கெடுப்பாக இடம்பெறும் குறும்தகவல் முறையிலாக வாக்களிப்பு (SMS Voting), 2022 ஜனவரி 29ஆம் திகதி பகல் 12 மணி முதல் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி பகல் 12 மணி வரை இடம்பெறும். மொத்தம் 10 நாட்கள் இடம்பெறும் இந்த குறும்தகவல் முறையிலாக வாக்களிப்பில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை பெறும் வீரர் 2021ஆம் ஆண்டின் ThePapare பிரபல கால்பந்து வீரராக தெரிவாகுவார்.

இப்பொழுது நீங்கள் உங்கள் விருப்பமான கால்பந்து வீரருக்கு வாக்களிக்கலாம்.

>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<