மேற்கிந்திய தீவுகள் T-20 அணியிலிருந்து கிறிஸ் கெயில் நீக்கம்

529
ICC

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நாளை (01) செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T-20  தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் கவுர்ட்ணி பிரவுன் அறிவித்துள்ளார்.

ஆறு வருடங்களுக்கு பின்னர் பங்களாதேஷ் செல்லவுள்ள மேற்கிந்திய தீவுகள்

பங்களாதேஷ் அணியுடன் தங்களது சொந்த மண்ணில் …

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. டெஸ்ட் தொடரை தங்களது வேகப்பந்து ஆற்றலைக் கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

இவ்வாறான நிலையில், T-20 தொடரில் எந்த அணி வெற்றிபெற்று, தொடரில் முன்னிலைப்பெறப் போகின்றது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இப்படி இருக்கையில் மேற்கிந்திய தீவுகள் அணி தங்களது அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில் இல்லாமல் T-20  தொடரில் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் நேற்றைய தினம் 13 பேர் கொண்ட தமது T-20 அணியை அறிவிக்கும் போதே, கிரிஸ் கெயிலுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள செய்தியினை வெளியிட்டுள்ளது. T-20 தொடர்களை பொருத்தவரையில் மேற்கிந்திய தீவுகளில் மாத்திரமின்றி, கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுபவர் கிறிஸ் கெயில்.

பெரேராக்களின் இணைப்பினால் மீண்டது இலங்கை

ககிசோ றபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சியின் அதிரடி…

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையுடன் முன்னணி வீரர்கள் முரண்பட்டு, போட்டிகளில் பங்கேற்க மறுத்து வரும் நிலையில், கிறிஸ் கெயில் தொடர்ந்தும் ஒருநாள் மற்றும் T-20 அணிகளில் விளையாடி வருகின்றார். இறுதியாக, இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக பதினொருவர் அணிக்கு எதிரான கண்காட்சி T-20 போட்டியில் கெயில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியிருந்தார்.

தற்போது கிறிஸ் கெயிலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் செட்விக் வோல்டன் மற்றும் பந்து வீச்சாளர் ஷெல்டோன் கொட்ரெல் ஆகியோர் 13 பேர் கொண்ட அணிக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் உலக பதினொருவர் அணிக்கு எதிரான T-20 குழாமில் இணைக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் குழாமில் செட்விக் வோல்டன் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்றாலும், ஷெல்டோன் கொட்ரெல் குழாமில் இணைக்கப்பட்டிருந்தார். ஷெல்டோன் கொட்ரெல் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடி 59 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை வீழ்த்தியிருந்தார்.

செட்விக் வோல்டன் மற்றும் ஷெல்டோன் கொட்ரெல் ஆகியோர் இறுதியாக கனடாவில் நடைபெற்ற குளோபல் T-20 தொடரில் விளையாடியிருந்தனர். இதில் ஷெல்டோன் கொட்ரெல் குறித்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன்,  செட்விக் வோல்டன் இரண்டு அரைச் சதங்களை விளாசியிருந்தார்.

தனுஷ்க குணதிலக்கவிற்கு ஆறு போட்டிகளில் விளையாடத் தடை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்களுக்கான …

கெயில் தொடர்பில் தெரிவுக்குழு தலைவர் கவுர்ட்ணி பிரவுன்  குறிப்பிடுகையில்,

பங்களாதேஷ் T-20 தொடரிலிருந்து கிறிஸ் கெயிலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டோன் கொட்ரெல் இணைக்கப்பட்டுள்ளார். அணியின் பந்து வீச்சை பலப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இறுதியாக லோர்ட்ஸில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக செயற்பட்டிருந்ததுஎன குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி

கார்லோஸ் பிராத்வைட் (தலைவர்), சேமியல் பத்ரி, ஷெல்டோன் கொட்ரெல், என்ரே பிளட்சர், எவின் லிவிஸ், அஷ்லி நேர்ஷ், கீமோ பௌல், ரோவ்மன் பௌல், தினேஷ் ராம்தீன், என்ரோ ரசல், மார்லன் சேமியல்ஸ், செட்ரிக் வோல்டன், கெஸ்ரிக் வில்லியம்ஸ்

பங்களாதேஷ் அணி

சகிப் அல் ஹசன் (தலைவர்), தமிம் இக்பால்,  சௌமிய சர்கார்,  லிடன் டாஸ், முஷ்பிகுர் ரஹீம், சபீர் ரஹ்மான், மஹ்மதுல்லா, மொஷ்டாக் ஹுசைன், நஜ்முல் இஸ்லாம், டூபல் ஹீசைன், முஷ்தபிசூர் ரஹ்மான், அபு ஹைடர், அபு ஜெயாட், அரிபுல் ஹக்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…