சாமர கபுகெதர நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதில் கேள்விக்குறி

2822
Chamara Kapugedara

இலங்கை அணியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சாமர கபுகெதர கொழும்பில் வியாழக்கிழமை இடம்பெறவிருக்கும் இந்திய அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற போட்டி மூலம் இலங்கை  ஒருநாள் போட்டியின் 20ஆவது தலைவராக பொறுப்பேற்றிருந்த கபுகெதர, தற்போது முதுகு உபாதை ஒன்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. எனினும், இலங்கை அணியின் முகாமைத்துவம் கபுகெதர போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பதை புதன்கிழமை மாலையே உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

கண்டியில் நடந்த போட்டியின் போதே அவருக்கு இந்தப் பிரச்சினை சிறிய அளவில் இருந்தது. அவர் அப்போட்டியில் துடுப்பாடிய காரணத்தினால் அவரது நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கின்றது. அவருக்கு இன்னும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அறிய அணியின் உடற்பயிற்சி உதவியாளர் கூறும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. நாங்கள் அவரது உபாதையைப் பற்றி நாளையும், (புதன்கிழமை) நாளை மதியத்தின் பின்பும் பார்ப்போம். நாளை அவரால் பயிற்சி மேற்கொள்ள முடியாவிடில், அவர் நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்என இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க கபுகெதர பற்றி ESPNCricinfo  செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தார்.  

இலங்கை – உலக பதினோருவர் கண்காட்சிப் போட்டி ஒத்திவைப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு..

இந்தியாவுடனான  இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அணியினை மந்த கதியில் ஓவர்கள் வீச வழிநடாத்திய இலங்கையின் ஒருநாள் அணித் தலைவர் உபுல் தரங்க இரண்டு போட்டிகளில் விளையாட தடையினை பெற்றார். இதற்காக, குறித்த போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட தற்போது உபாதைக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்பட்டிருக்கும் கபுகெதர நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதோடு, மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோற்பட்டை உபாதைக்கு ஆளாகியிருந்த தினேஷ் சந்திமாலும், இந்திய அணியுடனான எஞ்சிய போட்டிகளில் விளையாட உடற்தகுதியினை பெறமாட்டார் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை, காயத்திற்கு ஆளாகியிருந்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர் தனுஷ்க குணத்திலக்க நான்காவது ஒருநாள் போட்டியின் மூலம் மீள்வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கபுகெதர நான்காம் போட்டியில் அணியில் இருந்து விலகுவாராயின் அணிக்கு தனன்ஞய டி சில்வா அழைக்கப்பட சந்தர்ப்பம் உள்ளதாகவும், அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்பட உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.