சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்கவுக்கு ஐ.சி.சியினால் போட்டித் தடை

626

இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தடை விதித்துள்ளது.

காலி டெஸ்டில் முதலில் துடுப்பாடும் இலங்கை அணி

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் …

இதற்கமைய, குறித்த மூவரும் தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்குகொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்டி, இவ்விரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியின் தலைவராக உப தலைவரும், வேகப்பந்து வீச்சாளருமான சுரங்க லக்மால் செயற்படவுள்ளார். அத்துடன், இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக துடுப்பாட்ட பயிற்றுனர் திலான் சமரவீர செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பாக கடமையாற்றி வருகின்ற சந்திம மாபடுனவை இடைக்கால முகாமையாளராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் கடந்த மாதம் 27ஆம் திகதி சென்.லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டு மணித்தியாலங்கள் மைதானத்திற்கு வராமல் போட்டியை தாமதப்படுத்திய சம்பவம் தொடர்பில் இந்த மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தை சீர்குழைக்கும் வகையில் நடந்துக்கொண்ட இம்மூவரது செயற்பாடும் .சி.சி விதிமுறைப்படி மூன்றாம் நிலை குற்றம் என பதிவுசெய்யப்பட்டது.  

சந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்க மீதான ஐ.சி.சி யின் இறுதித் தீர்ப்பு நாளை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சென்.லூசியா …

ஐசிசியின் மூன்றாம் நிலை குற்றத்தின் அடிப்படையில், வீரர் ஒருவருக்கு நான்கு தொடக்கம் எட்டு வரையிலான போட்டி இடைநிறுத்தல் புள்ளிகள் வழங்கப்படும் எனவும், இது 2 டெஸ்ட் அல்லது 4 முதல் 6 வரையான ஒரு நாள் போட்டிகள் வரை தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  

இது இவ்வாறிருக்க, இதுதொடர்பிலான இறுதித் தீர்ப்பு ஜுலை 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த விசாரணைகளை நேற்றைய தினம் (11) முன்னெடுப்பதற்கு .சி.சி நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை இம்மூவரும் ஏற்றுக்கொண்டதுடன், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுங்கு விதி ஆணைக்குழுவின் தலைவர் மைக்கல் பெல்ப் தலைமையிலான குழுவினால் நேற்று (11) மாலை இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைகள் ஸ்கைப் வீடியோ கலந்துரையாடல் மூலமாக இடம்பெற்றன.

இதில், குறித்த டெஸ்ட் போட்டியில் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய ஜவஹல் ஸ்ரீநாத் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சார்பில் இரண்டு சட்ட நிபுணர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

தாய் நாட்டில் தனது கன்னி போட்டியில் ஆடுவதில் ஆர்வம் கொண்டுள்ள ரொஷேன்

மூன்று வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் பின்னர்,…

சுமார் ஆறு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த விசாரணைகளின் முடிவில், குறித்த மூவரும் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு அடுத்து நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் .சி.சியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட டுவிட்டர் செய்திக் குறிப்பில், தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தினேஷ் சந்திமால், சந்திக ஹத்துருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் தமது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதால் அம்மூவருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் தடைவிதிப்பதற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று ஆரம்பமாகிய இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டில் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடையுடன், அபாராதம் விதிக்க .சி.சி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…