நெருங்கிவரும் 2019 உலகக் கிண்ணத்தில் திசரவிடம் நம்பிக்கை கொள்ளும் இலங்கை

1287

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு வலுவான அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கை, திசர பெரேரா மீது அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் அந்த போட்டிக்கு இன்னும் 18 மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், சகலதுறை வீரரான அவர் போட்டிகளை வெற்றிபெறச் செய்பவராக வருவார் என்ற நம்பிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது.

[rev_slider LOLC]

உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனது எடை பற்றி பிரித்தானிய பத்திரிகைகள் நையாண்டியாக …

கடந்த டிசம்பரில் திசர பெரேராவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டபோது அது குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ தவறாக இருந்தது. அப்போது அணியில் அவரது இடம் பற்றி கேள்வி எழுந்தது. குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அவரது ஓட்ட சராசரி 17 ஆக இருந்ததோடு பந்துவீச்சில் 32 ஆக இருந்தது. எனினும் தலைமை பயிற்சியாளராக சந்திக்க ஹத்துருசிங்கவின் வருகைக்கு பின் அவர் ஒரு வித்தியாசமான வீரராக மாறியுள்ளார்.   

துடுப்பாட்டத்தில் ஓன் திசையில் ஆதிக்கம் செலுத்தும் வீரரான திசர, பந்தை ஓப் திசையில் ஆடித்தாடுவதை பார்க்க முடிந்ததோடு, பங்களாதேஷில் நடந்த அண்மைய முத்தரப்பு போட்டியில் அவர் பந்துகளை தேர்வு செய்து துடுப்பெடுத்தாடிய விதம் கவரும்படியாக இருந்தது. அவரது பந்துவீச்சும் கூட ஒழுங்கு முறையில் இருந்ததோடு அவர் தொடர் நாயகனாகவும் தேர்வானார். அந்த தொடரில் பெரேரா 11 விக்கெட்டுகளை சுருட்டியதோடு 17 பந்துவீச்சு சராசரியை பெற்று 44 ஓட்ட சராசரியுடன் 134 ஓட்டங்களை குவித்தார். இதன் துடுப்பாட்ட வேகமும் 154 ஆக இருந்தது.

இலங்கையின் துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர, பெரேரா மீது இலங்கை அணி பெரிதாக எதிர்பார்ப்பு கொண்டிருப்பது மற்றும் அவர் மேலும் சிறப்பாக செயற்பட பயிற்சியாளர்கள் அவருக்கு உதவுவது குறித்து விளக்கினார்.     

உலகின் முதல் 10 வீரர்களுள் இடம்பெற காத்திருக்கும் குசல் மெண்டிஸ்

பங்களாதேஷில் இடம்பெற்று முடிந்த… உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள் …

அடிப்படையில் தலைமைப் பயிற்சியாளர் அவருடன் உரையாடி அவரது திறமையை புரியவைத்தார். பின்னர் நாம் அவரது ஆட்டத்தை மேம்படுத்த செயற்பட ஆரம்பித்தோம். வேகப்பந்து பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க அவரது ஓட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்தார். தொடர்ந்து அவர் ஆறாவது வரிசையில் துடுப்பெடுத்தாட வந்திருக்கும் நிலையில் துடுப்பாட்டத்தில் அவரிடம் எதிர்பார்க்கப்படுவது பற்றி விளக்கினோம். எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட்டுக்கு அவரது ஆட்டம் பாரிய பங்காற்றும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும் என்று Cricbuzz இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

போட்டியின் வெற்றிக்கான ஒரு முன்னணி வீரராக அவர் மாறுவார் என்று நாம் உறுதியாக உள்ளோம். தெளிவாக நாம் 2019 உலகக் கிண்ணத்தையே இலக்கு வைத்திருக்கிறோம். அணியின் முன்னணி அறு துடுப்பாட்ட வீரர்களையும் எடுத்துக் கொண்டால் எம்மிடம் பந்துவீச முடியுமானவர்கள் அதிகம் இல்லை. அஞ்செலோ மெத்திவ்ஸால் பந்து வீச முடியுமா என்பதிலும் சந்தேகம் இருந்து வருகிறது. எனவே, திசரவிடம் இருந்து நாம் பெரிதாக எதிர்பார்க்கிறோம். நாம் செய்யும் அனைத்துமே உலகக் கிண்ணத்தை இலக்கு வைத்த திட்டங்களாகும்என்றும் சமரவீர குறிப்பிட்டார்.

சதந்திர கிண்ண தொடரில் இருந்தும் விலகும் அசேல குணரத்ன

அண்மையில் நிறைவுற்ற பங்களாதேஷ் நாட்டுக்கான கிரிக்கெட் சுற்றுப் …

அதேபோன்று நீண்ட போட்டிகளுக்கு திசர பெரேரா அதிகம் ஆர்வம் காட்டாதபோதும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவரது கடைசி முதல்தர போட்டி நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் அவரது போட்டி திறமையை வளர்க்க அவரை சில முதல்தர போட்டிகளில் ஆட வைக்க அணி முகாமை முயற்சிக்கிறது.  

ஒருசில முதல்தர போட்டிகளில் அவரை விளையாட வைக்க எமக்கு ஒரு திட்டம் உள்ளது. அவரது காலம் மற்றும் செயல்களிலேயே அது அனைத்தும் தங்கி இருக்கிறது. ஆனால் அவர் ஒருசில முதல்தர போட்டிகளில் ஆடுவதை நாம் விரும்புகிறோம். சிவப்பு பந்து கிரிக்கெட்டில் ஆடுவது அவருக்கு உதவியாக இருக்கும் என்பதோடு போட்டி திறனும் மாறுபட்டது. பந்துவீச்சு என்று வரும்போது பந்தை பயன்படுத்துவது, துடுப்பாட்டம் என்று வரும்போது நீண்ட இன்னிங்ஸ் ஒன்றை ஆட கற்றுத் தருவது போன்ற விடங்களை கற்று முன்னேற்றிக்கொள்ள முடியும் என்று சமரவீர விளக்கினார்.  

பெரேராவின் திறமை பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்றபோதும் 28 வயது கொண்ட அவர் தனது திறமையை வெளிக்காட்டாதவராக இருந்தார். எனினும் ஹதுருசிங்கவின் வருகையால் பெரேரா தனது கிரிக்கெட் வாழ்வில் புதிய பக்கத்தை திருப்பியுள்ளார்.