ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஹேரத்

329
Rangana Herath

38 வயது நிரம்பிய இலங்கை அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் மற்றும் 20 ஓவர் சர்வதேச கிரிக்கட் ஆகியவற்றில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்ற செய்தியை இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா உறுதி செய்து உள்நாட்டு ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டு இருந்தார்.

இலங்கை கிரிக்கட் அதிகாரிகள் அவரது ஓய்வு தொடர்பான கோரிக்கையை ஏற்றுள்ள நிலையில் ரங்கன ஹேரத் தொடர்ந்தும் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கை அணிக்கு 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரங்கன ஹேரத் 74 விக்கட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். அதே வேளை 17 டி20 கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹேரத் 18 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இலங்கை அணியின் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பிறந்த தினத்தில் ரங்கன ஹேரத் கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற்றமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.