ஐ.பி.எல் தொடரை இலங்கையில் அல்லது துபாயில் நடத்த திட்டம்?

505

இந்த வருடம் நடைபெற எதிர்பார்க்கப்படும் 13ஆவது ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெறாது என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதால், வெளிநாட்டில் ஐ.பி.எல். தொடரை நடத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) மும்முரமாக இறங்கியுள்ளது.

இதன்படி, இந்த வருட .பி.எல் டி.20 தொடர் இலங்கை அல்லது துபாயில் நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான .பி.எல் தொடர் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டுக்கான தொடர் கடந்த மார்ச் மாத 29ஆம் திகதி ஆரம்பமாகி மே 24ஆம் திகதி வரை நடத்தப்பட இருந்த நிலையில் கொரோனாவின் கோர தாண்டவம் காரணமாக கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

IPL இற்காக ஆசிய கிண்ணம் இரத்து செய்யப்படாது: பாகிஸ்தான்

இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த ஆண்டுக்கான .பி.எல் டி.20 உலகக் கிண்ணத் தொடர் நடக்குமா இல்லையா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

.பி.எல் தொடரை நடத்தமால் விட்டுவிட்டால் ஏறத்தாழ இந்திய நாணயப்படி 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் .பி.எல் தொடரை இரத்து செய்யவும் முடியாமல், நடத்தவும் முடியாமல் பி.சி.சி.. திண்டாடி வருகிறது

மறுபுறத்தில் டி.20 உலகக் கிண்ணம் நடத்துவது தொடர்பிலான இறுதி முடிவு இந்த மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதால் பி.சி.சி.., செய்வதறியாமல் திணறி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக .பி.எல் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்பதால், .பி.எல் தொடரை இலங்கை அல்லது துபாயில் நடத்த பி.சி.சி. ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

அதற்கேற்றாற்போல் இரு நாடுகளும் தங்களது நாட்டில் .பி.எல் தொடரை நடத்த போட்டி போட்டு வருகிறது. இதனை பி.சி.சி.. நிர்வாகி ஒருவரே தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பி.சி.சி.. நிர்வாகி பேசியதாக வெளியாகியுள்ள செய்தியில்

”இந்த வருடத்துக்கான .பி.எல் தொடரை எங்கு நடத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அநேகமாக .பி.எல் தொடர் வெளிநாட்டில் நடைபெறவே அதிக வாய்ப்புள்ளது.” 

”கொரோனா பரவலால் தற்போது இந்தியாவில் நிலவும் சூழ்நிலையைப் பார்க்கையில், இரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில் போட்டியை நடத்தினாலும் கூட பொருத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்காது என்றுதான் தோன்றுகிறது.”

”இதனால், .பி.எல் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து .பி.எல் தொடரை எந்த நாட்டில் நடத்துவது என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்

ஊவா ப்ரீமியர் லீக் T20 தொடர் பற்றி இலங்கை கிரிக்கெட் சபையின் அறிவிப்பு

முன்னதாக .பி.எல் தலைவர் பிரிஜேஸ் படேல் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்,

”இரசிகர்கள் இல்லாமல் .பி.எல் தொடர் நடத்தப்பட்டால் இடம் பிரச்சினையில்லை. இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் .பி.எல் தொடரை நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.”

”ஆனால், எங்கள் எண்ணம் இந்தியாவில் நடத்துவதுதான். எனினும், மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தால்தான் நடத்த முடியும்.”

”அதேபோல, இந்தியாவில் நடத்தினால் நிச்சயம் 3 அல்லது 4 இடங்களுக்கு மேல் போட்டிகளை நடத்த முடியாது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வருவதைப் பொறுத்து அனுமதி கிடைக்கும். இல்லாவிட்டால் வெளிநாட்டில் நடத்தும் வாய்ப்பைத்தான் தேர்வு செய்வோம்.” எனத் தெரிவித்திருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<