ரியல் மெட்ரிட், ஜுவன்டஸ் அதிர்ச்சி தோல்வி

113

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் இரு முதல் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (27) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் மன்செஸ்டர் சிட்டி

கேப்ரியல் ஜேசுஸ் மற்றும் கெவின் டி ப்ருய்னேவின் கடைசி நேர கோல்கள் மூலம் ரியல் மெட்ரிட்டுக்கு எதிராக 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டிய மன்செஸ்டர் சிட்டி சம்பியன்ஸ் லீக் தொடரில் தீர்க்கமான முன்னிலையை பெற்றுள்ளது. 

செல்சியின் சம்பின்ஸ் லீக் எதிர்பார்ப்பில் பின்னடைவு: நபோலியை சமன் செய்த பார்சிலோனா

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் …..

ஸ்பெயின் முன்னணி கழகமான ரியல் மெட்ரிட்டை ப்ரீமியர் லீக் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி தோற்கடிப்பது இது முதல் முறையாகும்.

நிதி ஒழுங்கு முறை மீறலால் ஐரோப்பிய போட்டிகளில் இரண்டு பருவங்களுக்கு தடை விதிக்கப்பட்ட மன்செஸ்டர் சிட்டி அணி, அது தொடர்பில் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்த நிலையிலேயே அக்கழகத்துக்கு இம்முறை சம்பியன்ஸ் லீக்கில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.

இந்நிலையில் ரஹீம் ஸ்டர்லிங், செர்ஜியோ அகுவேரா மற்றும் டேவிட் சில்வா ஆகியோர் முதல் பதினொருவரில் இல்லாமலேயே ரியல் மெட்ரிட்டின் சொந்த மைதானமான சன்டியாகோ பர்னபியுவில் (Santiago Bernabéu Stadium) மன்செஸ்டர் சிட்டி எதிர்கொண்டது.   

நேர்த்தியாக விளையாடிய ரியல் மெட்ரிட் அணியின் முன், கோல் வாய்ப்புகளை பெறுவதற்கு மன்செஸ்டர் சிட்டி ஆரம்பத்தில் தடுமாறியதோடு, ரியாத் மஹ்ரஸ் மற்றும் பெர்னார்டோ சில்வா இருவரும் கடும் சவாலாக இருந்தனர். 

இந்நிலையில் மன்செஸ்டர் அணியின் தற்காப்பு அரணில் ஏற்பட்ட தவறை பயன்படுத்தி ரியல் மெட்ரிட் 60 ஆவது நிமிடத்தில் முதல் கோலை புகுத்தியது. வினிசியஸ் ஜுனிய் தனது கோல் பகுதியில் நிலைகொண்டிருப்பதை தடுப்பதற்கு கைலி வோக்கர் தவறிய நிலையில் அவர் பரிமாற்றிய பந்தை நெருக்கமான தூரத்தில் இருந்து இஸ்கோ கோலாக மாற்றினார்.  

இந்நிலையில் தனது சொந்த ரசிகர்கள் முன் ரியல் மெட்ரிட் இரண்டாவது கோலை தேடி ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த ஆரம்பித்தது. கரிம் பென்சமா மற்றும் செர்ஜியோ ராமோசின் அவ்வாறான முயற்சிகள் தடுக்கப்பட்டன. 

போட்டியை தனக்கு சாதகமாக்கும் முயற்சியாக கடைசி நேரத்தில் மன்செஸ்டர் சிட்டி அணி பெர்னாடோ சில்வாவுக்கு பதில் ரஹீம் ஸ்டர்லிங்கை களமிறக்கியது. இந்நிலையில் 78 ஆவது நிமிடத்தில் கெவின் டி ப்ருய்னே பரிமாற்றிய பந்தை கேப்ரியல் ஜேசுஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார். 

லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் (Round of 16) முதல் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (19) ஆரம்பமாகின. முதல் நாளின் ….

மூன்று நிமிடங்கள் கழித்து பெனால்டி பெட்டிக்குள் ரஹீம் ஸ்டர்லிங்கிற்கு எதிராக டானி கர்வஜா தவறிழைத்ததை அடுத்து மன்செஸ்டர் சிட்டி அணிக்கு தீர்க்கான ஸ்பொட் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனைக் கொண்டு கெவின் டி புருய்னே அந்த அணிக்கான வெற்றி கோலை பெற்றார்.  

போட்டி முடிவதற்கு நான்கு நிமிடங்கள் இருக்கும்போது கோலை நோக்கி பந்தை எடுத்துச் சென்ற கேப்ரியல் ஜேசுஸை கீழே வீழ்த்திய சர்ஜியோ ராமோஸ் சிவப்பு அட்டை பெற்றது ரியல் மெட்ரிட் அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. ரியல் மெட்ரிட் வீரராக அவர் வெளியேற்றப்படுவது இது 26 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

இதனால் ரியல் மெட்ரிட் தலைவரான சர்ஜியோ ராமோஸ் மன்செஸ்டர் சிட்டிக்கு எதிரான இரண்டாம் கட்டப் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளும் எதிர்கொள்ளும் சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டி எட்டிஹாட் அரங்கில் மார்ச் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

ஜுவன்டஸ் எதிர் லியோன்

லூகாஸ் டூசட்டின் கோல் மூலம் ஜுவன்டஸ் அணியை 1-0 என வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த லியோன் அணி சம்பியன்ஸ் லீக்கில் தனது எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டது.

பிரான்ஸ் அணியான லியோன் போட்டி ஆரம்பத்திலேயே இத்தாலி சம்பியன் ஜுவன்டசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. 20 ஆவது நிமிடத்தில் கார்ல் டொகோ எகம்பி தலையால் தட்டிவிட்டபோது பந்து பட்டும் படாமலும் கோல் கம்பத்தை விட்டு வெளியேறியது.  

எனினும் போட்டி அரை மணி நேரத்தை எட்டும்போது எதிரணிக்கு கொடுத்த நெருக்கடிக்கு லியோன் அணிக்கு நல்ல பலன் கிட்டியது. ஹெளசம் அவுரா பரிமாற்றிய பந்தை லூகாஸ் டூசட் கோலாக மாற்றினார். 

இரண்டாவது பாதியில் ஜுவன்டஸ் கழகம் போட்டியை தம்வசம் வைத்திருந்தபோதும் அதனால் கோல் பெற முடியவில்லை. அந்த அணி 14 கோல் முயற்சிகளில் ஈடுபட்டபோதும் இலக்கை நோக்கி ஒரு தடவை கூட பந்தை செலுத்தவில்லை.  

கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் போலோ டிபலா இருவரும் எதிரணி பெனால்டி பெட்டிக்குள் தடுக்கப்பட்டபோதும் நடுவர் ஸ்பொட் கிக் வழங்கும் அளவுக்கு எதிர்பார்ப்பை தூண்டவில்லை. 

அட்லடிகோ அணிக்கு எதிரான 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிக்குப் பின்னர் ஜுவன்டஸ் சம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில் இலக்கை நோக்கி ஒரு முறை கூட பந்தை செலுத்தாத சந்தர்ப்பமாக இது இருந்தது. 

1000ஆவது போட்டியில் விளையாடிய ரொனால்டோ: அடுத்தடுத்து 4 கோல்கள் பெற்ற மெஸ்ஸி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா ….

மறுபுறம் ஐரோப்பிய போட்டி ஒன்றில் லியோன் அணி ஜுவன்டஸை தோற்கடிப்பது இது முதல் முறையாகும். இதற்கு முன்னர் இரு அணிகளும் சந்தித்த நான்கு போட்டிகளில் ஒன்று சமநிலை பெற்றதோடு மூன்றில் லியோன் கழகம் தோல்வியையே சந்தித்தது. 

இரு அணிகளும் மோதும் 16 அணிகள் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டி ஜுவன்டஸின் சொந்த மைதானமாக அல்லியன்ஸ் அரங்கில் வரும் மார்ச் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. காலிறுதிக்கு முன்னேற ஜுவன்டஸ் இந்தப் போட்டியில் போராட வேண்டி இருக்கும்.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<