இங்கிலாந்து தொடருக்கான தென்னாபிரிக்கா குழாம் அறிவிப்பு

375

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான 24 பேர்கொண்ட தென்னாபிரிக்க குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க குழாத்தின் தலைவராக குயிண்டன் டி கொக் செயற்படவுள்ளதுடன், முன்னாள் தலைவர் பெப் டு ப்ளெசிஸ் துடுப்பாட்ட வீரராக அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 

IPL இல் பும்ராவின் புதிய சாதனை

அதேநேரம், தென்னாபிரிக்க குழாத்தில் 28 வயதான மிதவேகப் பந்துவீச்சாளர் க்ளென்டன் ஸ்டுர்மன் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளார். இவர் 43 போட்டித் தன்மையுடைய மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலதிகமாக 45 முதற்தர போட்டிகளில் விளையாடி178 விக்கெட்டுகளையும் இவர் வீழ்த்தியுள்ளார். 

இவருடன் தென்னாபிரிக்க அணியின் அனுபவ வீரர்களான காகிஸோ ரபாடா, டேவிட் மில்லர், டெம்பா பௌவுமா மற்றும் ஐ.பி.எல். தொடரில் வேகத்தால் அசத்திவரும் என்ரிச் நோக்கியா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

தென்னாபிரிக்க அணி இறுதியாக இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு ஒருநாள் போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்த நிலையில், கொவிட்-19 வைரஸ் காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த தொடரில் ரபாடா உபாதை காரணமாக வெளியேறியிருந்த நிலையில், இந்தமுறை ரபாடா அணியில் இடம்பித்துள்ளார். அத்துடன், உபாதை காரணமாக நீண்ட நாட்கள் அணியிலிருந்து வெளியேறியிருந்த ஜூனியர் டலா மீண்டும் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

தெரிவுசெய்யப்பட்டுள்ள குழாம் தொடர்பில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய தேர்வாளர் ஒருங்கிணைப்பாளர் விக்டர் ம்பிட்சேங் குறிப்பிடுகையில்,

“கிரிக்கெட் சபையின் உயிரியல் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வீரர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள 24 வீரர்களின் மூலமாக எமது அனைத்து பகுதிகளும் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த குழாத்தில் உள்ள வீரர்களை வைத்து, எமக்குள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடி, அணியின் திறமையை கணித்துக்கொள்ள முடியும்” என்றார். 

Video – LPL இல் பயிற்சியாளராகும் இலங்கை வீரர்கள் | Sports Roundup – Epi 138

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I மற்றும் ஒருநாள் தொடர்கள் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க குழாம் 

குயிண்டன் டி கொக் (தலைவர்), டெம்பா பௌவுமா, ஜூனியர் டலா, பெப் டு ப்ளேசிஸ், பிஜ்ரோன் போர்ச்யூன், பியூரன் ஹென்ரிக்ஸ், ரீஷா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளாசன், ஜோர்ஜ் லிண்டே, கேஷவ் மஹாராஜ், ஜென்னமன் மலன், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, என்ரிச் நோக்கியா, எண்டில் பெஹலுக்வாயோ, டுவைன் ப்ரிட்டோரியர்ஸ், காகிஸோ ரபாடா, தப்ரைஷ் ஷம்ஷி, லூதோ சிபம்லா, ஜொன்-ஜொன் ஸ்மட்ஸ், க்ளென்டன் ஸ்டுர்மன், பிட் வென் பில்ஜோன், ரஸ்ஸி வென் டெர் டஸன், கெயல் வெரென் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<