இந்தியாவில் நடைபெறும் மகளிர் T20 யில் சமரி அதபத்து

119
 

இந்தியாவில் மே 6ம் திகதி தொடக்கம் மே 11ம் திகதிவரை நடைபெறவுள்ள மூன்று அணிகளுக்கு இடையிலான மகளிர் T20 சவால் கிண்ண (Women’s T20 Challenge) கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்து விளையாடவுள்ளார்.

முதல் டி-20இல் இலங்கை மகளிர் அணியை வீழ்த்திய இங்கிலாந்து

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடன்…

ஆடவருக்கான ஐ.பி.எல். தொடரினை போன்று மகளிருக்கான T20 தொடர் ஒன்றை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக கடந்த வருடம் சர்வதேச வீராங்கனைகள் அடங்கிய இரண்டு அணிகளுக்கு இடையிலான கண்காட்சி போட்டியொன்று நடைபெற்றிருந்தது.

இம்முறை, மூன்று அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர் ஒன்றினை இந்திய கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது. சுப்பர்நோவஸ் (Supernovas), ட்ரெயல்ப்ளாஷர்ஷ் (Trailblazers) மற்றும் வெலொசிட்டி (Velocity) ஆகிய மூன்று மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அணிகளின் தலைவிகளாக இந்திய மகளிர் அணியின் முன்னணி வீராங்கனைகளான மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீட் கஹுர், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் செயற்படவுள்ளனர்.

இதேவேளை குறித்த தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள சமரி அதபத்து சுப்பர்நோவஸ் அணிக்காக விளையாடவுள்ளார். குறித்த அணியில் சமரி அதபத்துவுடன், நியூசிலாந்தின் லியா டஹுடு மற்றும் ஷோபி டிவைன் இங்கிலாந்தின் நடாலியா சேவியர் ஆகிய நான்கு வீராங்னைகள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த வருடம் இந்திய மகளிர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, சமரி அதபத்து சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.  மூன்று ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் அடங்கலாக 205 ஓட்டங்களையும், 5 T20I போட்டிகளில் 107 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். அத்துடன், துடுப்பாட்ட தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளும் முன்னேறியிருந்தார். இவ்வாறு தொடர்ச்சியாக சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்ததன் காரணத்தால் சமரி அதபத்துவுக்கு இந்த T20 தொடரில் விளையாடும்  வாய்ப்பு கிட்டியுள்ளது.

முதன்முறையாக நடைபெறவுள்ள மகளிர் T20 சவால் கிண்ணத் தொடரில், ரவுண்ட்-ரொபின் சுற்று அடிப்படையில் மொத்தமாக நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவிடம் போராடி தோல்வியுற்ற இலங்கை மகளிர் அணி

தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான…

போட்டி அட்டவணை

  • சுப்பர்நோவஸ் எதிர் ட்ரெயல்ப்ளாஷர்ஷ் – மே 6
  • வெலொசிட்டி எதிர் ட்ரெயல்ப்ளாஷர்ஷ் – மே 8
  • சுப்பர்நோவஸ் எதிர் வெலொசிட்டி – மே 9
  • இறுதிப்போட்டி – மே 11

அணிகள்

Supernova: Harmanpreet Kaur (c), Anuja Patil, Arundhati Reddy, Chamari Athapaththu (SL), Jemima Rodrigues, Lea Tahuhu(NZ), Mansi Joshi, Natalie Sciver(ENG), Poonam Yadav, Priya Punia, Radha Yadav, Sophie Devine(NZ), Taniya Bhatia, Coach: WV Raman

Trailblazers: Smriti Mandhana (c), Bharti Fulmali, Dayalan Hemalatha, Deepti Sharma, Harleen Deol, Jasia Akhtar, Jhulan Goswami, R Kalpana, Rajeshwari Gayakwad, Shakera Selman (WI), Sophie Ecclestone (ENG), Stafanie Taylor (WI), Suzie Bates (NZ), Coach: Biju George

Velocity: Mithali Raj (c), Amelia Kerr (NZ), Danielle Wyatt (ENG), Devika Vaidya, Ekta Bisht, Hayley Matthews (WI), Jahanara Alam (B’DESH), Komal Zhanzad, Shafali Verma, Shikha Pandey, Sushma Verma, Sushree Dibyadarshini, Veda Krishnamurthy, Coach: Mamta Maben

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<