மேலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று

195
Chahal, Gowtham test positive
 

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய வீரர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>> கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் வெளியாகின ; 2வது T20I இன்று!

முன்னதாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் காணப்பட்ட வீரர்களில் ஒருவரான குர்ணால் பாண்டியா கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதனை அடுத்து, அவருடன் நெருங்கிப் பழகியதாக கூறப்பட்ட எட்டு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 

இந்த எட்டு வீரர்களில் உள்ளடங்கியிருந்த யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய வீரர்களுக்கே தற்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

>> இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்து T20 தொடரை வென்ற இலங்கை

இதனை அடுத்து குறித்த வீரர்கள் இருவரும் ஏற்கனவே கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளான குர்ணால் பாண்டியாவுடன் நிலைமை சரியாகும் வரையில் இலங்கையில் தங்கவைக்கப்படுவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

அதேநேரம், தமது இலங்கை சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ஒருநாள் தொடர்களை நிறைவு செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரினை 2-1 எனக் கைப்பற்றிய நிலையில், T20 தொடரினை 2-1 என பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<