நூலிழையில் தோல்வியை தவிர்த்த ஸாஹிரா, தர்ஸ்டன் கல்லூரிகள்

138

சிங்கர் அனுசரணையில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகள் இன்று (27) நிறைவடைந்தன. இந்த மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு

புனித செபஸ்டியன் கல்லூரி சார்பில் துனித் ஜயதுங்கவும், நாலந்த கல்லூரி சார்பில் லக்ஷித ரசன்ஜனவும் சதம் பெற புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.

இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த புனித தோமியர் கல்லூரி

சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு..

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்டியன் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த நாலந்த கல்லூரி எஞ்சிய நேரம் முழுவதும் துடுப்பெடுத்தாடி 7 விக்கெட்டுகளை இழந்து 411 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம் 

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 241 (52.4) – துனித் ஜயதுங்க 116, நிஷித்த அபிலாஷ் 35, ரனிது டி சில்வா 3/48, கவிஷ் மதுரப்பெரும 4/47, லக்ஷித்த ரசன்ஜன 1/45

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 411/7 (93) – லக்ஷித்த ரசன்ஜன 157, மொக்‌ஷ சங்கல்ப 59*, மஹிம வீரகோன் 63, ஜயோத் கல்தேரா 34, ரனின்து டி சில்வா 30, ஷஷிக்க பெரேரா 3/59, வினூஜ ரணசிங்க 2/98

முடிவு போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவு


புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் ஸாஹிரா கல்லூரி, கொழும்பு

பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் புனித பெனடிக்ட் கல்லூரியின் நெருக்கடிக்கு மத்தியில் ஸாஹிரா கல்லூரி நூலிழையில் தோல்வியை தவிர்த்து போட்டியை சமநிலை செய்தது.

கொட்டஹேன, பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமான இரண்டு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட புனித பெனடிக்ட் கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி 107 ஓட்டங்களுக்கு சுருண்டதால் இரண்டாவது இன்னிங்ஸுக்கு பலோ ஒன் (follow on) செய்தது. எனினும் இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஆட்ட நேரம் முடிவுற்றது.

இதன்போது புனித பெனடிக்ட் கல்லூரிக்காக மஹீஷ் தீக்ஷன துடுப்பாட்டத்தில் 64 ஓட்டங்களையும் பந்து வீச்சில் இரண்டு இன்னிங்சுகளிலும் மொத்தம் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 264/8d (76) – கவீஷ ஜயதிலக்க 84, மஹீஷ் தீக்ஷன 64, கவிரு பெரேரா 42, சனோஜ் பெரேரா 20, மொஹமட் அர்ஷாத் 2/29, மொஹமட் மாதி 4/76

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 107 (41.2) – மொஹமட் ரிபாத் 30, இமேஷ் பெர்னாண்டோ 2/28, மஹீஷ் தீக்ஷன 4/31, மலிந்த பெரேரா 2/19

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O – 45/5 (20) – மஹீஷ் தீக்ஷன 2/10, மலிந்த பெரேரா 2/18

முடிவு போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவு


ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

சூரியவெவ மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் திலும் சுதீரவின் அபார துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு மூலம் ரிச்மண்ட் கல்லூரி ஆதிக்கம் செலுத்தியபோதும் தர்ஸ்டன் கல்லூரி தோல்வி ஒன்றை தவிர்த்து போட்டியை சமநிலை செய்தது.

இலங்கை கட்புலனற்றோர் அணியை வைட்-வொஷ் செய்த இந்திய கட்புலனற்றோர் அணி

இந்திய கட்புலனற்றோர் அணிக்கு எதிராக இன்று (27) நடைபெற்ற மூன்றாவது…

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ரிச்மண்ட் கல்லூரியின் திமுத் சந்தருவன் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்றார். திலும் சுதீர 80 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் ரிச்மண்ட் கல்லூரி 270 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரியின் 5 விக்கெட்டுகளை திலும் சுதீர வீழ்த்த அந்த அணி 89 ஓட்டங்களுக்கே சுருண்டு இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஒன் செய்தது. தர்ஸ்டன் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது கடைசி நாள் ஆட்ட நேரம் முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 270/4 (64) – திமுத் சந்தருவன் 101*, திலும் சுதீர 80, ஆதித்ய சிறிவர்தன 24, வினுஜ கிரியல்ல 23, அயேஷ் ஹர்ஷன 1/45

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 89 (28) –  சனுத் நன்தினு 37, திலும் சுதீர 5/12, சுகீத் நிம்னத 4/28

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O – 65/4 (19)

முடிவுபோட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது

zahira collமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க