பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெற்றுவரும் லீக் தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின் ஐந்தாவது பருவகாலத்திற்கான தொடர் இவ்வருடம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் போட்டிகள் நடைபெறுவது கடினமானதாக காணப்பட்டது. இந்நிலையில் தாக்குதல் நடைபெற்று 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாகிஸ்தான் மண்ணில் மெதுவாக சர்வதேச போட்டிகள் நடைபெற ஆரம்பித்துள்ளன.
PSL 2020: லாஹூர் அணியில் இலங்கை சீக்குகே பிரசன்ன
அடுத்த வருடம் (2020) நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) கிரிக்கெட்…
இறுதியாக இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் விளையாடியதன் மூலம் மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அதிகரித்துள்ளன. அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள போட்டி அட்டவணையின் பின்னர் பாகிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரானது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முயற்சியினால் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்று வந்தன.
இவ்வாறான நிலையில் இவ்வருடம் (2020) நடைபெறவுள்ள PSL தொடரின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும். 2020 PSL தொடரானது அடுத்த மாதம் (பெப்ரவரி) 20ஆம் திகதி தொடக்கம் மார்ச் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அரையிறுதி, இறுதி ஆட்டங்களுடன் தொடரில் மொத்தமாக 34 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது!
இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள்…
அதன்படி லாஹூர் கடாபி மைதானத்தில் இறுதி ஆட்டத்துடன் மொத்தமாக 14 போட்டிகளும், கராச்சி தேசிய மைதானத்தில் 9 போட்டிகளும், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் 8 போட்டிகளும், முல்டான் கிரிக்கெட் மைதானத்தில் 3 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
2020 பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் 6 அணிகளில் இருந்தும் மொத்தமாக 35 வீரர்கள் வெளிநாட்டு வீரர்களாக பங்கேற்கின்றனர். இதில் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பந்துவீச்சு சகலதுறை வீரர் சீக்குகே பிரசன்ன லாஹூர் கலாண்டர்ஸ் அணியில் விளையாடுகின்றார்.
தொடர் அட்டவணை (பகல் போட்டிகள் அனைத்தும் பிற்பகல் 2 மணிக்கும், இரவு போட்டிகள் அனைத்தும் பிற்பகல் 7 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளன.)
- 20 பெப்ரவரி – குவெட்டா கிளாடியேட்டர்ஸ் எதிர் இஸ்லாமாபாத் யுனைடெட் – கராச்சி (இரவு)
- 21 பெப்ரவரி – கராச்சி கிங்ஸ் எதிர் பெஷாவர் ஷல்மி – கராச்சி (பகல்)
- 21 பெப்ரவரி – லாஹூர் கலாண்டர்ஸ் எதிர் முல்டான் சுல்தான்ஸ் – லாஹூர் (இரவு)
- 22 பெப்ரவரி – குவெட்டா கிளாடியேட்டர்ஸ் எதிர் பெஷாவர் ஷல்மி – கராச்சி (பகல்)
- 22 பெப்ரவரி – இஸ்லாமாபாத் யுனைடெட் எதிர் முல்டான் சுல்தான்ஸ் – லாஹூர் (இரவு)
- 23 பெப்ரவரி – கராச்சி கிங்ஸ் எதிர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – கராச்சி (பகல்)
- 23 பெப்ரவரி -லாஹூர் கலாண்டர்ஸ் எதிர் இஸ்லாமாபாத் யுனைடெட் – லாஹூர் (இரவு)
- 26 பெப்ரவரி – முல்டான் சுல்தான்ஸ் எதிர் பெஷாவர் ஷல்மி – முல்டான் (இரவு)
இளையோர் உலகக் கிண்ணத்தில் இருந்து நஷீம் ஷா திடீர் விலகல்
இலங்கை அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி…
- 27 பெப்ரவரி – இஸ்லாமாபாத் யுனைடெட் எதிர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – ராவல்பிண்டி (இரவு)
- 28 பெப்ரவரி – முல்டான் சுல்தான்ஸ் எதிர் கராச்சி கிங்ஸ் – முல்டான் (பகல்)
- 28 பெப்ரவரி -பெஷாவர் ஷல்மி எதிர் லாஹூர் கலாண்டர்ஸ் – ராவல்பிண்டி (இரவு)
- 29 பெப்ரவரி – முல்டான் சுல்தான்ஸ் எதிர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – முல்டான் (பகல்)
- 29 பெப்ரவரி – இஸ்லாமாபாத் யுனைடெட் எதிர் பெஷாவர் ஷல்மி – ராவல்பிண்டி (இரவு)
- 1 மார்ச் – இஸ்லாமாபாத் யுனைடெட் எதிர் கராச்சி கிங்ஸ் – ராவல்பிண்டி (இரவு)
- 2 மார்ச் – பெஷாவர் ஷல்மி எதிர் கராச்சி கிங்ஸ் – ராவல்பிண்டி (இரவு)
- 3 மார்ச் – குவெட்டா கிளாடியேட்டர்ஸ் எதிர் லாஹூர் கலாண்டர்ஸ் – லாஹூர் (இரவு)
- 4 மார்ச் – இஸ்லாமாபாத் யுனைடெட் எதிர் லாஹூர் கலாண்டர்ஸ் – லாஹூர் (இரவு)
- 5 மார்ச் – குவெட்டா கிளாடியேட்டர்ஸ் எதிர் பெஷாவர் ஷல்மி – ராவல்பிண்டி (இரவு)
- 6 மார்ச் – கராச்சி கிங்ஸ் எதிர் முல்டான் சுல்தான்ஸ் – லாஹூர் (இரவு)
- 7 மார்ச் – பெஷாவர் ஷல்மி எதிர் இஸ்லாமாபாத் யுனைடெட் – ராவல்பிண்டி (பகல்)
- 7 மார்ச் -லாஹூர் கலாண்டர்ஸ் எதிர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – லாஹூர் (இரவு)
- 8 மார்ச் – முல்டான் சுல்தான்ஸ் எதிர் இஸ்லாமாபாத் யுனைடெட் – ராவல்பிண்டி (பகல்)
இலங்கைக் கிரிக்கெட்: 2019 ஒரு மீள்பார்வை
நாம் பிரியாவிடை கொடுத்த 2019 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்..
- 8 மார்ச் – லாஹூர் கலாண்டர்ஸ் எதிர் கராச்சி கிங்ஸ் – லாஹூர் (இரவு)
- 10 மார்ச் – லாஹூர் கலாண்டர்ஸ் எதிர் பெஷாவர் ஷல்மி – லாஹூர் (இரவு)
- 11 மார்ச் – குவெட்டா கிளாடியேட்டர்ஸ் எதிர் முல்டான் சுல்தான்ஸ் – லாஹூர் (இரவு)
- 12 மார்ச் – கராச்சி கிங்ஸ் எதிர் லாஹூர் கலாண்டர்ஸ் – கராச்சி (இரவு)
- 13 மார்ச் – பெஷாவர் ஷல்மி எதிர் முல்டான் சுல்தான்ஸ் – கராச்சி (இரவு)
- 14 மார்ச் – கராச்சி கிங்ஸ் எதிர் இஸ்லாமாபாத் யுனைடெட் – கராச்சி (இரவு)
- 15 மார்ச் – முல்டான் சுல்தான்ஸ் எதிர் லாஹூர் கலாண்டர்ஸ் – லாஹூர் (பகல்)
- 15 மார்ச் – குவெட்டா கிளாடியேட்டர்ஸ் எதிர் கராச்சி கிங்ஸ் – கராச்சி (இரவு)
- 17 மார்ச் – Qualifier முதலாமிடம் எதிர் இரண்டாமிடம் – கராச்சி (இரவு)
- 18 மார்ச் – Eliminator 1 – லாஹூர் (இரவு)
- 20 மார்ச் – Eliminator 2 – லாஹூர் (இரவு)
- 22 மார்ச் – இறுதிப்போட்டி – லாஹூர் (இரவு)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<