பங்களாதேஷை இலகுவாக வீழ்த்திய இலங்கை மகளிர் அணி

CAVA Women's Volleyball Challenge Cup 2023

73

நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற 5 முதல் 8ம் இடங்களை உறுதிசெய்யும் போட்டியில் இலங்கை அணி 3-0 என வெற்றியை பதிவுசெய்தது.

பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியின் முதல் செட்டை இலங்கை அணி இலகுவாக கைப்பற்றியது. ஆரம்பத்திலிருந்து முன்னிலையை காட்டிய இலங்கை மகளிர் அணி 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது.

தொடர்ந்து அபாரமாக ஆடிய இலங்கை மகளிர் அணி இலகுவான முறையில் முன்னேறியது. இரண்டாவது செட்டை 25-15 எனவும், மூன்றாவது செட்டை 25-07 எனவும் இலகுவாக கைப்பற்றி 3-0 என வெற்றியை பதிவுசெய்தது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 5வது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில், சனிக்கிழமை (27) கிரிகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிகிஸ்தான் எதிர் மாலைத்தீவுகள்

மாலைத்தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 முதல் 8ம் இடங்களை தீர்மானிக்கும் போட்டியில் கிரிகிஸ்தான் அணி 25-20, 25-20 மற்றும் 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<