பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

England tour of Pakistan 2024

46
England tour of Pakistan 2024

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்தின் 17 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

>>இலங்கை மகளிரை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ் A மகளிர் அணி<<

அடுத்த மாதம் பாகிஸ்தானிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது அங்கே .சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது 

இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இலங்கை தொடரில் உபாதை காரணமாக ஆடாது போயிருந்த முன்வரிசைத் துடுப்பாட்டவீரர் ஷேக் கிராவ்லி மற்றும் இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கின்றனர் 

ஷேக் கிராவ்லியின் இணைப்பு காரணமாக இலங்கை டெஸ்ட் தொடரில் ஆடிய ஆரம்ப வீரர் டேன் லோரன்ஸிற்கு பாகிஸ்தான் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் அறிமுக வீரர்களான பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோர்டன் கொக்ஸ் ஆகியோரும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர் 

இங்கிலாந்தின் முன்னணி சுழல்வீரர்களில் ஒருவரான ஜேக் லீச் மீண்டும் இங்கிலாந்திற்கு குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, இளம் சுழல்வீரரான ரெஹான் அஹ்மட்டிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது 

>>இலங்கை – நியூசிலாந்து தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு<<

இலங்கை டெஸ்ட் தொடரில் உபாதைக்குள்ளான வேகப்பந்துவீச்சாளரான மார்க் வூட் பாகிஸ்தான் தொடரில் ஆடும் வாய்ப்பினை இழக்க அவரின் இடத்தினை ஜோஸ் ஹல் தொடர்ந்து பிரதியீடு செய்கின்றார் 

பாகிஸ்தான்இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஒக்டோபர் 07ஆம் திகதி முல்டானில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது 

இங்கிலாந்து டெஸ்ட் குழாம் 

பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), ரெஹான் அஹ்மட், கஸ் அட்கின்ஸன், சொஹைப் பாஷிர், ஹர்ரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் கொக்ஸ், ஷேக் கிராவ்லி, பென் டக்கட், ஜோஸ் ஹல், ஜேக் லீச், ஒல்லி போப், மெதிவ் பொட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<