சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்கள் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குமான போட்டி மத்தியஸ்தராக இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் செயற்படவுள்ளார்.
நியூசிலாந்து தொடரிலும் இலங்கை அணியின் பயிற்சியாளராக சனத் ஜயசூரிய
போட்டி மத்தியஸ்தராக ஜவகல் ஸ்ரீநாத் மாத்திரம் பெயரிடப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு நடுவர்களாக இந்தியாவின் நிதின் மேனன், இங்கிலாந்தின் மைக்கல் கோக் மற்றும் பங்களாதேஷின் அஷான் ரஷா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த ருச்சிர பல்லியகுருகே மற்றும் ரவீந்திர விமலசிறி ஆகியோர் போட்டி நடுவர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 18ம் திகதி முதல் 30ம் திகதிவரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடுவர்கள் குழுாம்
- ஜவகல் ஸ்ரீநாத் (போட்டி மத்தியஸ்தர்)
- மைக்கல் கோக் (நடுவர்)
- அஷான் ரஷா (நடுவர்)
- நிதின் மேனன் (நடுவர்)
- ரவீந்திர விமலசிறி (நடுவர்)
- ருச்சிர பல்லியகுருகே (நடுவர்)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<