ஸ்டுவர்ட் புரோட்டுக்கு அபராதம் விதித்தது ஐசிசி

368

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஐசிசியின் விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் புரோட்டுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.

ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 42

இலங்கை அணியின் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T-20 வெற்றி, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ள SLC T20 தொடர்…..

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகின்றது.இந்த போட்டியில் இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (19)முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது. இதில் அறிமுக வீரர் ரிஷப் பாண்ட் 24 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஸ்டுவர்ட் புரோட்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இதன்போது ஆக்ரோஷமாக செயற்பட்ட ஸ்டுவர்ட் புரோட், ரிஷாப் பாண்ட்டை நோக்கி தவறான வார்த்தைகளால் திட்டுவது காணொளியில் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், போட்டி நடுவர்களாக செயற்பட்ட கிரிஸ் கெபனி மற்றும் மெரைஷ் எரஸ்மஸ் மற்றும் போட்டி மத்தியஸ்தர் ஜெப் கிரொவ் ஆகியோர் கொண்ட குழாம் ஸ்டுவர்ட் புரோட்டிடன் விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் குற்றம் செய்தமையை ஸ்டுவர்ட் புரோட் ஒப்புக்கொண்டமையால், போட்டிக் கட்டணத்தில் 15 சதவீத அபராதமும், ஐசிசி விதிமுறை மீறலுக்கான குற்றப்புள்ளி ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஐசிசி புதிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்ட பின்னர், ஸ்டுவர்ட் புரோட் செய்துள்ள முதலாவது குற்றமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் படி ஸ்டுவர்ட் புரோட், துடுப்பாட்ட வீரருக்கு எதிரான தவறான வார்த்தை பிரயோகம், நடத்தை மற்றும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தல் என்ற முதலாம் நிலை (Level 1) குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இலகுவாக காலிறுதிக்கு முன்னேறிய புனித தோமியர் கல்லூரி

கண்டி தர்மராஜ கல்லூரிக்கு எதிரான 17 வயதுக்கு உட்பட்ட பாடசலைகளுக்கு இடையிலான டிவிஷன் – 1 கிரிக்கெட்…….

எவ்வாறாயினும் ஸ்டுவர்ட் புரோட் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மேலதிக விசாரணைகள் எதுவும் அவசியம் அல்ல என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கிலாந்துஇந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<