மாகாண மல்யுத்த போட்டித் தொடரில் மட்டக்களப்பு அணி சம்பியன்

150

இந்த ஆண்டு 45ஆவது தடவையாக இடம்பெறவிருக்கும் தேசிய விளையாட்டு விழாவிற்கான வீரர்களை தெரிவு செய்யும் நோக்கோடு நடாத்தப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட அணிகளுக்கு இடையிலான மல்யுத்த போட்டித் தொடரில், மட்டக்களப்பு மாவட்ட அணி 12 தங்கப் பதக்கங்கள் மற்றும் 09 வெள்ளிப் பதக்கங்களை வென்று சம்பியனாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது.  

தொண்டர் படையணி மெய்வல்லுனரில் அசாம், ஆஷிக் போட்டிச் சாதனை

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுகளுக்கிடையில் …

நேற்று முன்தினம் (12) மட்டக்களப்பு வெபர் மைதான உள்ளக அரங்கில் நடைபெற்ற இந்த மல்யுத்த போட்டித் தொடரில் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற அம்பாறை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டம் ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றியிருந்தன.  

இந்த மூன்று அணிகளிலும் இடம்பெற்றிருந்த மல்யுத்த வீரர்கள் மொத்தமாக 14 நிறைப்பிரிவுகளில் பலப்பரீட்சை நடாத்தியிருந்தனர். இந்த மல்யுத்த போட்டித் தொடரில் மட்டக்களப்பு அணி சார்பாக சான்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகத்தினை சேர்ந்த 30 வீரர்கள் வரையில் பங்கெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வீரர்களில் மட்டக்களப்பு மாவட்ட அணிக்காக V. சாயுதன் (40-43 கிலோ கிராம் எடைப்பிரிவு), S. தனுஜன் (43-46 கிலோ கிராம் எடைப்பிரிவு), T. யுகிர்தன் (46-48 கிலோ கிராம் எடைப்பிரிவு), K. லக்ஷன் (48-52 கிலோ கிராம் எடைப்பிரிவு), K. துஸ்சந்தன் (52-57 கிலோகிராம் எடைப்பிரிவு), S. சிவபாலன் (57-61 கிலோ கிராம் எடைப்பிரிவு), K. மிதுலாஷனன் (70-74 கிலோ கிராம் எடைப்பிரிவு), N. பிரசன்னா (74-79 கிலோ கிராம் எடைப்பிரிவு ), K. நவநீதன் (79-86 கிலோ கிராம் எடைப்பிரிவு), S. அபிநாத் (86-92 கிலோ கிராம் எடைப்பிரிவு), S. நிதுர்சன் (92-97 கிலோ கிராம் எடைப்பிரிவு), M. வினோத் (96-120 கிலோ கிராம் எடைப்பிரிவு) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர்.

உலகக் கிண்ண வீரர்கள் குழாத்தினை அணிகள் எப்போது அறிவிக்கும்?

அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் …

அதேநேரம், M. சிந்துஜன் (40-43 கிலோ கிராம் எடைப்பிரிவு), S. ஜெயச்சந்துரு (43-46 கிலோ கிராம் எடைப்பிரிவு), S. சாகித்தியன் (52-57 கிலோ கிராம் எடைப்பிரிவு), N. நிஷோத் (57-61 கிலோ கிராம் எடைப்பிரிவு), P. பிரதீபன் (61-65 கிலோ கிராம் எடைப்பிரிவு), V. கவிதன் (74-79 கிலோ கிராம் எடைப்பிரிவு), E. பெரோஸ் (79-86 கிலோ கிராம் எடைப்பிரிவு), R. மோகன்ராஜ் (92-97 கிலோ கிராம் எடைப்பிரிவு), T. லக்ஷணனன் (96-120 கிலோ கிராம் எடைப்பிரிவு) ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட அணிக்காக வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாகாண அணிகள் இடையிலான மல்யுத்த போட்டித் தொடரில் திருகோணமலை அணி 01 தங்கம் மற்றும் 04 வெள்ளிப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தினை தமக்கு சொந்தமாக்க, அம்பாறை மாவட்ட அணி 01 தங்கப்பதக்கத்துடன் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…