அபு தாபி T10 தொடரில் விளையாடவுள்ள மதீஷ பதிரண

Abu Dhabi T10 League 2022

190

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள அபு தாபி T10 தொடருக்கான பங்ளா டைகர்ஸ் அணி, இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பதிரணவை தக்கவைத்துள்ளது.

பங்ளா டைகர்ஸ் அணி இந்த பருவகாலத்துக்காக தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

சவாலான முன்னிலையுடன் இங்கிலாந்து இளம் அணி

இதில் கடந்த ஆண்டு பங்ளா டைகர்ஸ் அணிக்காக விளையாடிய லசித் மாலிங்க பாணியில் பந்துவீசக்கூடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பதிரணவை, இந்த ஆண்டும் தங்களுடைய அணியில் தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்த மதீஷ பதிரண, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற T20I தொடருக்கான இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தார். எனினும், உபாதை காரணமாக அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

எனினும் தற்போது உபாதையிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள இவர், இம்மாதம் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

மதீஷ பதிரணவை பங்களா டைகர்ஸ் அணி தக்கவைத்துள்ளதுடன், பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிரையும் தக்கவைத்துள்ளது.

இவ்வாறு இரண்டு வீரர்களை தக்கவைத்துக்கொண்ட இந்த அணி, வீரர்கள் வரைவுக்கு முன்னர் நேரடியாக இரண்டு வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கொலின் மன்ரோ மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லிவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அபு தாபி T10 தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 23ம் திகதி முதல் டிசம்பர் 4ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<