கால்பந்து போட்டியின் பாதிநேரம் அமைதிக்காத்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்

154
Image courtesy - BBC

இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கால்பந்தாட்ட தொடரில் ஜியனோ மற்றும் எம்பொலி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியை பார்வையிட்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் 43 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் வார வெற்றியையும் பதிவு செய்த பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகள்

லா லிகா கால்பந்து சுற்றுப் போட்டிகளின் இரண்டாம் வார நிறைவில் ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா…

கால்பந்து போட்டிகளை பொருத்தவரையில், ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய விளையாட்டு என்பது அனைவரும் அறிந்த விடயம். அதுவும் இத்தாலியில் நடைபெறும் சீரி கால்பந்தாட்ட தொடரானது, இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் மற்றும் ஸ்பெயினில் நடைபெறும் லா லீகா போன்ற மிகப்பெரிய தொடர்களுடன் சம பலம் பொருந்திய தொடராகும்.

இப்படியான ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய தொடரொன்றில் ரசிகர்கள் அமைதியாக இருப்பதென்பது, அதுவும் போட்டியின் கிட்டத்தட்ட பாதி நேரம் (43 நிமிடங்கள்) அமைதியாக இருப்பதென்பது நினைத்தும் கூட பார்க்கமுடியாத வழக்கத்துக்கு மாறான செயல்தான்.

இதற்கான காரணம் கடந்த செவ்வாய்க்கிழமை (21) இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பிராதான வழிகளை இணைக்கும் மொராண்டி பாலத்தின் அதிகமான பகுதி, அந்நாட்டில் பெய்துவந்த கடும் மழையின் காரணமாக உடைந்து விழுந்தது. இந்த அனர்த்தத்தில் பாலத்தில் சென்ற வாகனங்கள் குடைசாய்ந்ததுடன், 43 பேர் உயரிழந்திருந்தனர். அதுமாத்திரமின்றி பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

SAFF கிண்ண தொடருக்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பங்களாதேஷில் இடம்பெறவுள்ள…

இந்த நிலையில் உயிரிழந்த 43 பேரையும் நினைவு கூறும் வகையில் ஒருவருக்கு ஒரு நிமிடம் என்ற அடிப்படையில், ரசிகர்கள் 43 நிமிட மௌன அஞ்சலியை செலுத்தியுள்ளனர். ஜியனோவில் நடைபெற்ற இந்த போட்டியில், சொந்த அணி கோலடித்த போதிலும் ரசிகர்கள் எந்த ஆரவாரத்தையும் வெளிக்காட்டவில்லை என்பது சிறப்பம்சமாகும்.

போட்டியின் 6ஆவது மற்றும் 18ஆவது நிமிடங்களில் சொந்த அணியான ஜியனோ, இரண்டு கோல்களை அடித்தது. எனினும் ரசிகர்கள் எவரும் இதற்கான மகிழச்சியை வெளிப்படுத்தவில்லை. போட்டியின் 43 நிமிடங்கள் நிறைவடைந்த பின்னரே ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். குறித்த நேரத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் மைதானத்திலிருந்த திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஜியனோ அணி, எம்பொலி அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, இந்த பருவகாலத்தின் முதலாவது வெற்றியை சுவைத்தது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க