அதிக கோல்களில் ரொனால்டோவை முந்தினார் நெய்மர்

182
Neymar

பெரு அணிக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஹட்ரிக் கோல் பெற்ற நெய்மர், பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் பெற்றவர் வரிசையில் ரொனால்டோவை பின்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். 

>> Video – போட்டி முடிந்ததும் கோல் அடித்து வென்ற Manchester United | FOOTBALL ULAGAM

தென் அமெரிக்க பிராந்தியத்திற்காக நேற்று (13) நடைபெற்ற இந்த தகுதிகாண் போட்டியில் பிரேசில் அணி 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வீரரான நெய்மர். பெனால்டி முறையில் இரு கோல்களையும் மேலதிக நேரத்தில் மற்றொரு கோலையும் புகுத்தினார். 

இதன்மூலம் அவர் பிரேசில் அணிக்காக மொத்தம் 64 கோல்களை பெற்று ரொனால்டோவை பின்தள்ளினார். அவர் இதுவரை தேசிய அணிக்காக 103 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

எனினும் ஓய்வுபெற்ற ரொனால்டோ தனது 17 ஆண்டு கால்பந்து வாழ்வில் இரண்டு உலகக் கிண்ணங்களுடன் பிரேசில் அணிக்காக 98 போட்டிகளில் 62 கோல்களை பெற்றுள்ளார். 

இதன்படி 28 வயதான நெய்மரை விடவும் பீலே மாத்திரமே பிரேசில் அணி சார்பில் அதிக கோல்களை பெற்றவராக உள்ளார். பீலே 77 கோல்களை பெற்றுள்ளார். 

>> கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொவிட் தொற்று

எனினும் தமது அணியின் தற்போதைய நட்சத்திர வீரர் நெய்மரையும் கடந்தகாலத்தின் சிறந்த வீரர்களையும் ஒப்பிட்டு கூறுவதற்கு பிரேசில் பயிற்சியாளர் டிடே தயக்கத்தை வெளியிட்டார்.  

ஒப்பிட்டுப் பார்ப்பது நியாயம் அற்றது என்று பெரு அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் அவர் குறிப்பிட்டார். நெய்மரின் எதிர்வுகூற முடியாத் தன்மை பற்றி என்னால் கூற முடியும். அவர் வில் மற்றும் அப்பாக இருக்கிறார். வாய்ப்புகளை உருவாக்கவும் பெறவும் அவரால் முடியும். அவர் மேலும் மேலும் சிறப்பாக ஆடுவதோடு அதிக முதிர்ச்சி பெற்று வருகிறார் என்றும் டிடே கூறினார்.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<