நியூசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே இந்த வாரம் ஆரம்பமாகும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 16 பேர் அடங்கிய இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>புதிய தலைவரினைப் பெறும் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி<<
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கே ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.
இந்த டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் (18) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும் நிலையில் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டிருக்கும் குழாம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கெடுத்த அதே வீரர்களை பெரும்பாலும் கொண்டிருப்பதோடு, மிக முக்கிய மாற்றமாக ஒசத பெர்னாண்டோ இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.
தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை A அணிக்காக பிரகாசித்திருந்த ஒசத பெர்னாண்டோ குறித்த சிறப்பாட்டம் காரணமாகவே இலங்கை டெஸ்ட் அணியில் மிக நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் இணைக்கப்பட்டிருக்கின்றார்.
அதேநேரம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிரகாசிக்காது போயிருந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் நிஷான் மதுஷ்க இலங்கை குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றார். அதேவேளை வேகப்பந்துவீச்சாளரான கசுன் ராஜிதவிற்கும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை டெஸ்ட் குழாம்
தனன்ஞய டி சில்வா (தலைவர்), திமுத் கருணாரட்ன, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஒசத பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வன்டர்செய், மிலான் ரத்நாயக்க
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<