சொந்த மண்ணில் இந்தோனேஷியாவை தோற்கடித்த இலங்கை அணி

215

ஆசிய விளையாட்டு விழா நடைபெறும் நாடான இந்தோனேஷியாவில், அவர்களது ஹொக்கி அணியை 3-1 என வென்றி கொண்ட இலங்கை ஹொக்கி அணி தமது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.   

ஆசிய விளையாட்டு விழாவில் முதல் வெற்றியை பதிவுசெய்த இலங்கை ஹொக்கி அணி

இரண்டு அணிகளும் தான் விளையாடிய அனைத்து …

இலங்கை அணி கடந்த போட்டியிலும் ஹொங் கொங் அணியை வென்றதன் மூலம், இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற உற்சாகத்தில் போட்டிக்குள் களம் இறங்கியது. தமது சொந்த மண்ணில் விளையாடும் இந்தோனேஷிய அணியானது தமது முதல் போட்டியில் பிரபல ஜப்பான் அணிக்கு சவால் கொடுத்து 3-1 என்ற சிறு கோல் வித்தியாசத்திலேயே தோல்வியுற்றது. இலங்கை அணி ஜப்பான் அணியுடன் 11-0 என தோல்வியுற்றதால், இலங்கை அணிக்கு இப்போட்டி இலகுவாக அமையாது என முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது.  

முதல் கால் பகுதி

எதிர்பார்க்கப்பட்டது போலவே இரண்டு அணிகளும் ஆரம்பம் முதலே கடுமையான போட்டியை வெளிப்படுத்தின. சொந்த மண்ணில் விளையாடும் இந்தோனேஷிய அணியானது, தனது ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் போட்டியில் இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. எனினும், முதல் காலில் இரண்டு அணிகளாலும் எந்த ஒரு கோலையும் அடிக்க முடியவில்லை.

இரண்டாம் கால் பகுதி

இலங்கை அணி வீரர் சந்தருவன் ப்ரியலங்க 24ஆம் நிமிடத்தில் இலங்கை அணிக்கு முதல் கோலை அடித்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். 26ஆம் நிமிடத்தில் இலங்கை அணியின் ஹேந்தெனியவிற்கு பச்சை அட்டை காட்டப்பட்டது. தொடர்ந்து 28ஆம் நிமிடத்தில் இந்தோனேஷிய வீரர் சிரெகரிற்கு பச்சை அட்டை காட்டப்பட்டது.

முதல் பாதி: இலங்கை 1 – 0 இந்தோனேஷியா

மூன்றாம் கால் பகுதி

ஆட்டத்தின் 38ஆம் நிமிடத்தில் இந்தோனேசிய அணி பெனால்டி கோர்ணர் மூலமாக கோல் அடித்து போட்டியை சமநிலை செய்தது. இலங்கை அணி தமக்கு கிடைத்த பல வாய்ப்புகளை தவறவிட்ட நிலையில், 42ஆம் நிமிடத்தில் இசங்க குமார மூலமாக இரண்டாவது கோல் அடித்து மீண்டும் போட்டியில் முன்னிலையை பெற்றது இலங்கை தரப்பு.

Photos: Sri Lanka vs Indonesia | Asian Games 2018 – Men’s Hockey (Day 8)

ThePapare.com | 26/08/2018 Editing and re-using images without …

நான்காம் கால் பகுதி

போட்டியின் இறுதி காலில், இந்தோனேஷிய அணி வீரரான எபாண்டி ஜெரிக்கு நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. தொடர்ந்து 50ஆம் நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை ரணசிங்க தவறவிட்டார். இதன்போது பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. எனினும், 54ஆம் நிமிடத்தில் இசங்க குமார தனது இரண்டாவது கோலை அடித்து இலங்கை அணியை மேலும் முன்னிலைக்கு அழைத்து சென்றார். எனவே, 60 நிமிடங்கள் முடிவில் இலங்கை அணி 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முழு நேரம்: இலங்கை 3 – 1 இந்தோனேஷியா  

உலக மற்றும் ஆசிய தர வரிசையில் உள்ளடங்காத இந்தோனேஷிய அணியானது இவ்வாறு ஒரு சிறந்த போட்டியை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, 1966ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவின் பின்னர், இலங்கை ஹொக்கி அணி முதல் முறை ஆசிய விளையாட்டு விழாவில் இரண்டு போட்டிகளை வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி அடுத்து 28ஆம் திகதி இந்திய அணியை சந்திக்கவுள்ளது   

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…